திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1930 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1930பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வ்யதிரேகத்தால் தரியாதவர்கள் இருக்க-உன்னைக் கொண்டு கார்யம் இன்றிக்கே இருப்பார்க்கு அன்றோ நீ உதவுவது -என்று சொல்லப் புக்காள்- இவ்வார்த்தை சொல்லித் தலைக் கட்டினால் பின்னை தனக்கு அவகாசம் அறும் -என்று பார்த்து அதுக்கு முன்பே காலைப் பிடித்தான் காலைப் பிடிக்கிறது என் –மார்வத்து எழுத்து என்கிறது என்-வாயிது விரல் இது என்கிறது என்) 9
ஆடி அசைந்து ஆய் மடவாரொடு நீ போய்க் கூடிக் குரவை பிணை கோமளப் பிள்ளாய் தேடித் திரு மா மகள் மண் மகள் நிற்ப ஏடி இது என் இது என் இது என்னோ –10-8-9
பதவுரை Show / Hide
திரு மா மகள், Thiru Ma Magal - பெரிய பிராட்டியாம் (- (இதுஎன் இதுஎன்?))
மண் மகள், Man Magal - பூமிப்பிராட்டியாரும்
தேடி நிற்ப, Thedi Nirpa - தேடிக்கொண்டிருக்க
நீ போய், Nee Poi - அவர்களை உபேக்ஷித்துப்போய்
ஆய் மடவாரொடு, Aai Madavarodu - இடைப்பெண்களோடே
கூடி, Koodi - கலந்து
குரவை பிணை, Kuravai Pinai - ராஸக்ரீடை நடத்தின
கோமளம் பிள்ளயா, Komalam Pillaiya - அழகிய பிள்ளாய்!
இது என், Idhu En - இது என்ன காரியம்!
ஏடீ, Eadi - வாராய் தோழீ!