திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1931 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1931பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் தானே வந்து மேல் விழச் செய்தேயும் இவர்களுக்கு பாவ பந்தம் கனத்து இருக்கச் செய்தேயும் ஏறிட்டுக் கொண்ட சங்கல்பம் குலையாத படி நின்றதொரு நிலை உண்டு இறே இது கற்றார்க்கு அந்த மிறுக்கு இல்லை) 10
அல்லிக் கமலக் கண்ணனை யங்கோர் ஆய்ச்சி எல்லிப் பொழுதூடிய ஊடல் திறத்தைக் கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை சொல்லித் துதிப்பார் அவர் துக்கமிலரே –10-8-10
பதவுரை Show / Hide
அல்லி கமலம் கண்ணனை, Alli Kamalam Kannanai - தாதுகளையுடைய தாமரைப் பூப்போன்ற திருக்கண்களையுடைய கண்ணபிரானைக்குறித்து
அங்கு, Angu - திருவாய்ப்பாடியில்
ஓர் ஆய்ச்சி, Or Aaychi - ஓரிடைச்சி
எல்லி பொழுது, Elli Pozhudhu - இராப்பொழுதிலே
ஊடிய, Oodiya - ப்ரணயரோஷந் தோற்றப்பேசின
ஊடல் திறத்தை, Oodal Thirathai - வெறுப்புவார்த்தை விஷயமாக
கல்லில் மலி, Kallil Mali - மலையைக்காட்டிலும் அதிசயத்த (வலிமைகொண்ட)
தோள், Thol - திருத்தோள்களையுடையரான
கலியன், Kalyan - திருமங்கையாழ்வார்
சொன்ன, Sonna - அருளிச்செய்த
மாலை, Maalaik - இச்சொல்மாலையை
துதிப்பார் அவர், Thudhippar Avar - எம்பெருமானை ஏத்துமவர்கள்
துக்கம் இலர், Thukkam Ilir - துன்பமற்று வாழப்பெற்றுவர்கள்.