திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1933 | பெரிய திருமொழி || (10-9–புள்ளுருவாகி) (பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு) - (தலைவியின் ஆற்றாமை கண்டு இரங்கிய தாய் தலைவனை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒருவர் இருவர் அன்றிக்கே ஊராக அனுபவிக்கும் படி குருகுல வாஸம் பண்ணினார்க்கும் ஆட ஒண்ணாத கூத்துக்களை அன்றோ நாம் உபகரித்தது ஆனபின்பு நமக்கு இது ஒன்றும் பழி யாகப் புகுகிறதோ -என்று இருக்கிறாயோ – ஊருக்காக உபகரித்த படி சொல்லிற்று -முன் –இனி ஒருத்திக்காக உபகரித்த படி சொல்லுகிறது) 2 | மன்றில் மலிந்து கூத்து வந்தாடி மால் விடை ஏழும் அடர்த்து ஆயர்
அன்று நடுங்க வா நிரை காத்த ஆண்மை கொலோ வறியேன் நான்
நின்ற பிரானே நீள் கடல் வண்ணா நீ யிவள் தன்னை நின் கோயில்
முன்றில் எழுந்த முருங்கையில் தேனா முன் கை வளை கவர்ந்தாயே –10-9-2 | பதவுரை Show / Hideநின்ற பிரானே, Nindra Piraane - திருமலையில நின்றருளும் பிரானே! (- (இது)) நீள் கடல் வண்ணா, Neel Kadal Vanna - பெரிய கடல்போன்ற வடிவையுடையவனே! நீ, Nee - நீ நீன் கோயில் மூன்றில் எழுந்த முருங்கையில் தேன் ஆ, Neen Koyil Moondril Ezhunthha Murungaiyil Then Aa - தன் கோயில் முற்றத்திலுண்டான முருங்கை மரத்தின் தேனை எளிதாகக் கவருமாபோலே இவள் தன்னை, Ival Thannai - இப்பெண்மகளினுடைய முன் கைவளை, Mun Kaivazhai - முன்கையிலுள்ளவளைகளை கவர்ந்தாயே, Kavarnthaye - கைக்கொண்டாயே, மன்றில் மலிந்து, Manril Malinthu - நாறசந்தியிலே பொருந்தி நின்று. உவந்து, Uvandu - திருவுள்ளமுகந்து கூத்து ஆடி, Koothu Aadi - (குடக்கூத்து முதலிய கூத்துகளை யாடியும்) மால் விடை ஏழும் அடர்த்து, Maal Vidai Ezhum Adarthu - கரிய காளைகளேழையும் வலியடக்கியும், அன்று, Anru - (இந்திரன் கல்மாரி பொழிந்த) அக்காலத்தில் ஆயர் நடுங்க, Aayar Nadunga - இடையர்கள் நடுங்கிநிற்க ஆநிரை, Aanirai - பசுக்கூட்டங்களை காத்த, Kaatha - ரக்ஷித்தோமென்கிற ஆண்மை கொலோ, Aanmmai Koloo - மேனாணிப்பினாலோ? நான் அறியேன், Naan Ariyeen - என்ன காரணமென்று நான் அறிகின்றிலேன் |