திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1935 | பெரிய திருமொழி || (10-9–புள்ளுருவாகி) (பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு) - (தலைவியின் ஆற்றாமை கண்டு இரங்கிய தாய் தலைவனை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உன்னுடைய வடிவு அழகை ஒரு கால் காட்டிக் கொண்டு போகிறிலை பாவன பிரகர்ஷத்தாலே -உருவு வெளிப்பாட்டாய் முன்னே நின்று போகிறிலை- பரக்கச் சொல்வதால் என்ன கார்யம் உண்டு – சாபமாநய சௌமித்ரே-என்று நினைத்த போதே-வாங்கிக் கார்யம் கொள்ளலாம் படி உரிய அடியார் கையில் ஆயுதத்தோபாதியாக நினைத்திரா நின்றாய்) 4 | மல்கிய தோளும் மானுரியதளும் உடையவர் தமக்குமோர் பாகம்
நல்கிய நலமோ நரகனைத் தொலைத்த கரதலத்தது அமைதியின் கருத்தோ
அல்லியங்கோதை யணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய்
சொல்லியென் நம்பி இவளை நீ யுங்கள் தொண்டர் கைத் தண்டு என்றவாறே –10-9-4 | பதவுரை Show / Hideநம்பீ, Nambi - ஸ்வாமிந்! (- (இப்படி உபேக்ஷித்திருப்பதானது) (அன்றி)) அல்லி அம் கோதை, Alli Am Kothai - செவ்விமாலையினாலே அழகுபெற்ற மயிர் முடியையுடையளான இப்பெண்பிள்ளையினுடைய அணி, Ani - விலக்ஷணமான நிறம், Niram - மேனி நிறத்தை கொண்டு, Kondhu - அபஹரித்தது மன்றி முன்னே வந்து நின்று போகாய், Munnai Vandu Nindru Pogai - உருவெளிப்பாட்டாலே எப்போதும் இவள் கண்ணெதிரே தோற்றிப் புறம்பு போகிறாயில்லை நீ, Nee - நீ இவளை, Ivazhai - இப்பெண்பிள்ளையை உங்கள் தொண்டர்கை தண்டு என்ற ஆறு, Ungal Thondarkai Thandu Endra Aaru - அடியார் கையிலுள்ள தடியைப்போலே நினைத்திருக்கும் விதம் என்னே! சொல்லி என், Solli En - (இவள் திறத்திலே உனக்கு உள்ள உபேக்ஷையைப்பற்றி விரிவாகச்) சொல்வதனால் மல்கிய தோளும், Malkiya Tholum - பணைத்த தோள்களையும் மான் உரி அதளும், Maan Uri Adhalum - மானின் உரிக்கப்பட்ட தோலையும் உடையவர் தமக்கும், Udaiyavar Thamakkum - உடையவரான சிவபிரானுக்கும் ஓர் பாகம், Oru Paagam - திருமேனியில் ஒரு பகுதியை நல்கிய, Nalkiya - (இடமாகக்) கொடுத்திருக்கிறோ மென்கிற நலமோ, Nalamo - பெருமையை நினைத்தோ? நாகனை, Naganei - நாகாஸுரனை தொலைத்த, Tholaitha - கொன்றொழிப்பதற்கீடான காதலத்து, Kaadhalathu - கையிலுள்ள அமைதியின் கருத்தோ, Amaithiyin Karuththo - மிடுக்கை நினைத்தோ? |