திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1937 | பெரிய திருமொழி || (10-9–புள்ளுருவாகி) (பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு) - (தலைவியின் ஆற்றாமை கண்டு இரங்கிய தாய் தலைவனை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு கால் வடிவு அழகைக் காட்டிப் போகிறிலை -என்னுதல்-உருவு வெளிப்பாட்டாலே முன்னே நின்று போகிறிலை -என்னுதல் – எந்தை பிரானே-தன்னடையே பழுத்து நெகிழ்ந்து விழுகிறத்தை எறி மழுவைக் கொண்டு வியாபாரிக்க வேணுமோ) 6 | அரக்கியர் ஆகம் புல்லென வில்லால் அணி மதிள் இலங்கையர் கோனை
செருக்கழித்து அமரர் பணிய முன்னின்ற சேவகமோ செய்ததின்று
முருக்கிதழ் வாய்ச்சி முன்கை வெண் சங்கம் கொண்டு முன்னே நின்று போகாய்
எறிக்கிலைக்காக வெறி மழு வோச்சல் என் செய்வது எந்தை பிரானே –10-9-6 | பதவுரை Show / Hideஎந்தை பிரானே, Endhai Pirane - எம்பெருமானே! முன், Mun - முன்பொருகால் அரக்கியர், Arakkiyar - ராக்ஷஸ ஸ்த்ரீகளினுடைய ஆகம், Aaham - மார்பு புல்லென, Pullen - சூன்யமாம்படியாக அணி மதிள் இலங்கையர் கோனை, Ani Mathil Ilangaiyar Konai - அழகிய மதிள்களையுடைய இலங்காபுரியிலுள்ளார்க்குத் தலைவனான இராவணனை வில்லால், Villal - ஒரு வில்லாலே செருக்கு அழித்து, Serukku Azhithu - கொழுப்படக்கி அமர்ர் பணிய நின்ற, Amarr Panai Nindra - தேவர்கள் வணங்குமாறு நின்ற சேவகமோ, Sevagamo - பராக்ரமத்தை நினைத்தோ இன்று செய்த்து, Indru Seiththu - இன்று (இவள் திறத்திலே உபேக்ஷ) செய்வது? முருக்கு இதழ் வாய்ச்சி, Murukku Idhal Vaaychchi - முருக்கம்பூப்போன்ற அதரத்தையுடையளான இப்பெண்பிள்ளையினுடைய முன் கை, Mun Kai - முன்கையிலுள்ள வண் சங்கம், Van Sangam - அழகிய வளைகளை கொண்டு, Kondhu - பறித்துக்கொண்டது மன்றி முன்னே நின்று போகாய், Munne Nindru Pogaai - உருவெளிப்பாட்டாலே எப்போதும் இவள் கண்ணெதிரே தோன்றிப் புறம் போகிறாயில்லை, எருக்கு இலைக்கு ஆக, Erukku Ilaikku Aaga - எருக்கிலையை உதிர்ப்பதற்காக எறி மழு ஓச்சல் என் செய்வது, Eri Mazhu Ochal En Seivathu - வீசுகோடாலியைக் கொண்டு ஓங்கியடிப்பது எதுக்கு? |