திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1939 | பெரிய திருமொழி || (10-9–புள்ளுருவாகி) (பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு) - (தலைவியின் ஆற்றாமை கண்டு இரங்கிய தாய் தலைவனை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவள் உடைய வைலஷண்யம் ஒன்றையும் புத்தி பண்ணிற்று இல்லை – வாயில் பொகட்டின நீர் இழிச்சவும் கொப்பளிக்கவுமாய் இருக்கும் அவ்வோபாதியாக நினையா நின்றாய் -இவளையும்) 8 | பொருந்தலன் ஆகம் புள்ளு வந்தேற வள்ளுகிரால் பிளந்து அன்று
பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த பெருமை கொலோ செய்ததின்று
பெரும் தடங்கண்ணி சுரும்புறு கோதை பெருமையை நினைந்திலை பேசில்
கருங்கடல் வண்ணா கவுள் கொண்ட நீராம் இவள் எனக் கருதுகின்றாயே –10-9-8 | பதவுரை Show / Hideஅன்று, Anru - முன்பொருகால் (- (கருங் கடல் வண்ணா!)) பொருந்தலன், Porundhalan - பகைவனான இரணியனுடைய ஆகம், Aaham - சரீரத்திலே புள், Pul - (கழுகு பரந்து முதலிய பறவைகள்) உவந்து ஏற, Uvanthu Eera - மகிழ்ந்து ஏறியுண்ணும்படியாக வள் உகிரால், Val Ukiral - கூர்மையான நகங்களாலே பிளந்து, Pilandhu - (அவ்வுடலைப்) பங்கஞ் செய்து) பெருந் தகைக்கு, Perun Thagaikku - பெருத்தன்மை வாய்ந்தவனான ஸுக்ரீவனுக்கு இரங்கி, Irangi - அருள் கூர்ந்து வாலியை முனித்த, Vaaliyai Muniththa - வாலியைச் சீறி முடிந்தோமென்கிற பெருமை கொலோ, Perumai Kolo - பெருமையை நினைத்தோ இன்று செய்த்து, Indru Seiththu - இப்போது (இவள்திறத்திலே உபேக்ஷை) செய்வது? பெரு தட கண்ணி, Peru Thada Kanni - மிகப் பரந்த கண்களை யுடையளாய் சுரும்பு உறு கோதை, Surumbu Uru Kothai - (மதுபான விருப்பத்தினால்) வண்டுகள் மாறாத கூந்தலை யுடையளான இப்பெண் பிள்ளையினுடைய பெருமையை, Perumaiyai - வைலக்ஷண்யத்தை நினைந்திலே, Ninaindhile - ஆராய்கின்றிலை பேசில், Pesil - (இவள் திறத்தில் நீ கொண்டிருக்கு மெண்ணத்தைப்) பேசப் புகுந்தால் இவள் கவுள் கொண்ட நீர் ஆம் என கருது கின்றாய், Ival Kavul Kondu Neer Aam En Karuthu Kindraai - வாயினுட் கொள்ளப்பட்ட நீர்போலே இவனை நினைத்திருக்கின்றாயத்தனை. |