திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1941 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1941பெரிய திருமொழி || (10-9–புள்ளுருவாகி) (பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு) - (தலைவியின் ஆற்றாமை கண்டு இரங்கிய தாய் தலைவனை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தான் ஓன்று கண்டு சொல்லுகை அன்றிக்கே-முன்பு உள்ளார் சொன்ன பாசுரத்தை யாயிற்று சொல்லிற்று – யன் மங்களம் ஸூ பர்ணச்ய வினதாகல்ப யத்புரா அம்ருதம் ப்ரார்த்தயா நஸ- -பரம பக்தி இருந்த படியை சொன்ன படி – அதுக்கு அநந்தரம் உண்டாம் கைங்கர்ய லஷ்மியைப் பெற்று விஸ்த்ருதமாம்) 10
வேட்டத்தைக் கருதா தடியிணை வணங்கி மெய்ம்மை நின்று எம்பெருமானை வாள் திறல் தானை மங்கையர் தலைவன் மான வேற் கலியன் வாய் ஒலிகள் தோட்டலர் பைந்தார்ச் சுடர் முடியானைப் பழ மொழியால் பணிந்து உரைத்த பாட்டிவை பாடப் பத்திமை பெருகிச் சித்தமும் திருவோடு மிகுமே –10-9-10
பதவுரை Show / Hide
வேட்டந்தை கருதாது, Vettandhai Karudhadhu - மேன்மேலே பெருகி வருகிற காமனைகளைக் கொள்ளாமல்
அடி இணை வணங்கி, Adi Inai Vanangi - தன் திருவடியிணைகளையே (பரமப்ரயோஜனமாக்க் கொண்டு) வணங்கிநிற்க
மெய்ம்மை நின்ற, Meimmai Nindra - (அப்படிப்பட்ட பசுமை காந்திகளுக்கு) உண்மையாகத் தன்னைக் காட்டிக் கொடுக்குமவனும்
தோடு அலர் பை தார் சுடர் முடியானை, Thodu Alar Pai Thaar Sudar Mudiyanaai - இதழ்களானவை விரிந்து விகஸிக்கப்பெற்ற பசுமைதங்கிய (திருத்துழாய்) மாலையை ஒளிமிக்க திருமுடியிலே அணிந்துள்ளவனுமான
எம் பெருமானை, Em Perumaanai - எம்பெருமானை நோக்கி,
வாள் திறல் தானே, Vaal Thiral Thaaney - வாள் வலி கொண்ட சேனையையுடையவரும்
மங்கையர் தலைவன், Mangaiyar Thalaivan - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரும்
மானம் வேல், Maanam Veel - பெருமைதங்கிய வேற்படையையுடைய வருமான
கலியன், Kalyan - திருமங்கையாழ்வாருடைய
வாய் ஒலிகள், Vaai Oligal - ஸ்ரீஸூக்தியாய்
பழமொழியால் பணிந்து உரைத்த, Pazhamozhiyal Panindhu Uraitha - பழமொழிகளைக் கொண்டு விநயத்துடன் அருளிச் செய்தவையான
பாட்டு இவை பாட, Paatu Ivai Paada - இப்பாசுரங்களைப் பாடவே
சித்தம், Siththam - (பாடுமவர்களது) நெஞ்சானது
பத்திமை பெருகி, Pathimai Perugi - பரமபக்திதலையெடுக்கப் பெற்று
திருவொடு மிகும், Thiruvodu Mikum - (எம்பெருமானது திருவடிகளில் நித்ய கைங்கரிய விருப்பமாகிற) செல்வமும் விஞ்சிவளரப்பெறும்.