திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1942 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1942பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருத்தாய் செம்போத்தே-போத்துத் திருத்துகை யாவது -அநு கூலிக்கை – என்றும் ஒக்க இவற்றின் உடைய ரஷணமே பண்ணிப் போருகையாலே வந்த குணவத்தா ப்ரதையை உடையவன் – ஸ்ரீ லஷ்மீ பதி என்கை அன்றிக்கே இது தானே தனக்குப் பேராய் இருக்கை – ஒரு கால் சொன்னால் ஆதரம் மட்டம் என்று இருக்கிறதாய் கொண்டு இருகால் மாட்டுச் சொல்கிறாள்) 1
திருத்தாய் செம்போத்தே திரு மா மகள் தன் கணவன் மருத்தார் தொல் புகழ் மாதவனை வரத் திருத்தாய் செம்போத்தே –10-10-1
பதவுரை Show / Hide
செம்போத்தே, Semboththae - ஓசெம்போத்துப் பட்சியே! (- (செம்போத்தே! திருத்தாய்))
திருமாமாள் தன் கணவன், Thirumaamal Than Kanavan - பெரியபிராட்டியார்க்கு கொழுநனாய்
மருதர், Maruthar - மணம் மிக்க மாலையை யணிந்துள்ளவனாய்
தொல் புகழ், Thol Pugazh - நித்யஸித்தமான கீர்த்தியை யுடையவனான
மாதவனை, Madhavanai - எம்பெருமானை
வர திருத்தாய், Vara Thiruththai - இங்கே வருமாறு நீதிருந்த வேணும்;