திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1952 | பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பசுக்களும் இடையரும் வர்ஷத்தைப் பரிஹரித்துக் கொள்ளுதல் – ஸ்ரீ பிராட்டி -அதார்மிகனான ராவணன் நஷ்டன் ஆவான் -என்று சபித்து போரும் என்று ஆயிற்று – இவளுக்கு தென்றல் பரிஹரித்துக் கொள்ள ப்ராப்தி உள்ளது) 1 | குன்றம் ஓன்று எடுத்து ஏந்தி மா மழை
அன்று காத்த அம்மான் அரக்கரை
வென்ற வில்லியார் வீரமே கொலோ
தென்றல் வந்து தீ வீசும் என் செய்கேன் –11-1-1 | பதவுரை Show / Hideஅன்று, Anru - முன்பொருகால் குன்றம் ஒன்று, Kuntram Onru - (கோவர்த்தனமென்கிற) ஒருமலையை எடுத்து, Eduthu - (குடையாக) உயரவெடுத்து ஏந்தி, Aendi - (ஏழுநாள் ஓய்வின்றிப்) பிடித்துக் கொண்டிருந்து மா மழை, Maa Mazhai - (இந்திரன் பெய்வித்த) பெரு மழையில் நின்றும் காத்த, Kaatha - (அடியார்க்ளைக்) காப்பாற்றி யருளின அம்மான், Ammaan - ஸ்வாமியும் அரக்கரை, Arakkarai - ராக்ஷஸாக்ளை வென்ற, Vendru - கொன்றொழித்த வில்லியார், Villiyaar - வில்லையுடையருமான பெருமாளுடைய வீரமே கொலோ, Veerame Kolo - பராக்ரமத்தினாலோ தென்றல் வந்து தீ வீசும், Thendral Vandu Thee Veesum - தென்றற்காற்று வந்து நெருப்பை வீசுகின்றது! என் செய்கேன், En Seigken - (இதற்கு) என்ன பண்ணுவேன்! |