திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1954 | பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஓதம் கிளர்ந்த கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையராய் இருக்கிறவருடைய – பரிமள பிரசுரமாய் இருக்கிற தாரானது உள்ளே புக்கு ஸ்த்ரீத்வத்தை நோக்கிக் கொண்டு மறைய இருக்கிறது என் – இங்கனே புறப்பட்டாயோ -என்று அறை கூவா நின்றது) 3 | சங்கும் மாமையும் தளரும் மேனி மேல்
திங்கள் வெங்கதிர் சீறும் என் செய்கேன்
பொங்கு வெண்டிரைப் புணரி வண்ணனார்
கொங்கலர்ந்த தார் கூவும் என்னையே –11-1-3 | பதவுரை Show / Hideசங்கும், Sangum - கைவளைகளும் மாமையும், Maamaiyum - நிறமும் தளரும், Thalarum - சோர்ந்திருக்கப்பெற்ற மேனிமேல், Menimeel - (எனது) உடம்பின்மேலே திங்கள், Thingal - சந்திரனுடைய வெம் கதிர், Vem Kathir - கொடிய கிரணங்களானவை சீறும், Seerum - சீறுகின்றன பொங்கு வெண்திரை புணாரிணனார், Pongu Ventrirai Punarinar - கிளர்கின்ற வெளுத்த அலைகளையுடைய கடல் போன்ற நிறவண முடையரான பெருமாளுடைய கொங்கு அலர்ந்ததர், Kongu Alarnthathar - பரிமளம் விரிகின்ற திருத்தழாய்மாலையானது என்னை கூவும், Ennai Koovum - என்னோடே போர் செய்ய அறைகூவாநின்றது என் செய்கேன், En Seigken - என்ன பண்ணுவென்!-. |