திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1955 | பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (போன இடத்திலே நலிய வேணும் என்று தாய் வடிவு கொண்டு வந்தவளை அனுகூலை என்று புத்தி பண்ணாதே அவளை பிரதிகூலை என்றே அறிந்து அவள் முலையை உண்டு முடித்த ஆராட்சி இல்லாத செயலோ) 4 | அங்கோர் ஆய்க்குலத்துள் வளர்ந்து சென்று
அங்கோர் தாயிருவாகி வந்தவள்
கொங்கை நஞ்சுண்ட கோயின்மை கொலோ
திங்கள் வெங்கதிர் சீறு கின்றதே –11-1-4 | பதவுரை Show / Hideதிங்கள், Thingal - சந்திரனுடைய வெம் கதிர், Vem Kathir - கொடிய கிரணங்கள் சீறுகின்றது, Seerugindrathu - சீறுவதானது- சென்று, Sendru - (மதுரையில் நின்றும்) போய் அங்கு ஓர் ஆய் குலத்திலே வளர்ந்து, Angu Oor Aai Kulaththile Valarnthu - அந்த விலக்ஷணமான இடைக்குலத்துள் வளர்ந்து கொண்டிருக்கையில், அங்கு ஓர் தாய் உருஆகி, Angu Oor Thaai Uruaagi - அங்குத் தாயாகிய யசோதைப்பிராட்டியின் வடிவு பூண்டு வந்தவளான பூதனையினுடைய கொங்கை நஞ்சு உண்ட, Kongai Nanju Unda - முலையில் தடவியிருந்த விஷத்தை கோயின்மை கொலோ, Koyinmai Koloo - பராக்ரமமடியாகவோ? |