திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1956 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1956பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அரியவற்றை வருத்தமறச் செய்து தலைக் கட்ட வல்லவன் தன்னை நெருக்கிக் கடைந்து உள்ளுண்டான மதியை வாங்குகையோ-இக்கடல் இங்கனே கிடந்தது கூப்பிடுகின்றது என்னைப் போலே மதி இழந்தோ இக்கடலும் கூப்பிடுகின்றது – மதி எல்லாம் உள் கலங்கி இறே இவளும் கிடக்கிறது – ஒன்றுக்கும் விக்ருதையாகாத நான் கலங்கிக் கூப்பிடுகிறாப் போலே இருந்ததீ இக்கடலும் தன் காம்பீர்யம் எல்லாம் அழிந்து கூப்பிடுகிறபடியும்) 5
அங்கோர் ளரியாய் அவுணனைப் பங்கமா விரு கூறு செய்தவன் மங்குல் மா மதி வாங்கவே கொலோ பொங்கு மா கடல் புலம்புகின்றதே –11-1-5
பதவுரை Show / Hide
அங்கு, Angu - ப்ரஹிலாதாழ்வான் எங்குமுளன்கண்ணன் என்று சொன்ன வப்பொழுதே
ஆள் அரிஆய், Aal Ariyai - நரஸிம்ஹ மூர்த்தியாக தரித்து
அவுணனை, Avunai - (இரணியமென்னும்) அசுரணை
பங்கம் ஆ, Pangam Aa - மானபங்காக்கி
இரு கூறு செய்தவன், Iru Kooru Seithavan - இருதுண்டமாகக் கிழித்த பெருமான்
மங்குல்மாமதி, Mangulmaamathi - ஆகாசத்திலே விளங்குகின்றசிறந்த சந்திரனை
வாங்கவே கொலோ, Vaangave Kolo - (தன்னிடத்தில் நின்றும்)அபஹாரித்ததனாலேயோ
பொங்குமா கடல், Pongumaa Kadal - திரைக்கிளப்பத்தையுடைய கருங்கடலானது
புலம்புகினறது, Pulampuginrathu - கோஷிக்கின்றது!