திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1959 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1959பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தேசிகனான ஸ்ரீ விபீஷண ஆழ்வான் நின்று வழி இட்டுக் கொடுக்கையாலே ராஷசர்கள் வெல்ல மாட்டிற்று இலர்கள் இறே – அப்படியே நிலவரே வழி காட்டி கொடு வந்து நலியா நிற்க நம்மால் பரிஹரிக்கப் போமோ) 8
மாலினம் துழாய் வரும் என்நெஞ்சகம் மாலினந்துழாய் வந்து என்னுள் புகக் கோல வாடையும் கொண்டு வந்ததோர் ஆலி வந்தது ஆல் அரிது காவலே –11-1-8
பதவுரை Show / Hide
என் நெஞசகம், En Nenjasagam - எனது நெஞ்சானது
மால்இனம், Maalinam - (அப்பெருமான் பக்கலுண்டான)  வியாமோஹத்திற்குத் தகுதியாக
துழாய் வரும், Thuzhai Varum - அலைந்துகொண்டு வாரா நின்றது
மாலின், Maalin - (அந்த) எம்பெருமானுடைய
அம் துழாய், Am Thuzhai - அழகிய திருத்துழாய் மாலையானது
என்னுள் வந்து புகளுதல், Ennul Vandu Pugaluthal - என்னுடைய நினைவுக்குவர
வந்தது ஓர் ஆலி, Vandhadhu Oru Aali - (ஏற்கெனவே தனியே) வந்துபார்த்துப்போனவொரு சிறு துளியானது
கோலம், Kolam - அழகிய
வாடையும், Vaadaiyum - வாடைக்காற்றையும்
கொண்டு வந்தது, Kondhu Vandhadhu - துணைகூட்டிக்கொண்டு வந்துவிட்டது.
ஆல், Aal - அந்தோ! (இனி)
காவல், Kaaval - (உயிரைக்) காப்பாற்றிக் கொள்
அரிது, Aridhu - முடியாதகாரியம்