திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1962 | பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்தால் சொல்லிற்று ஆயிற்று என் என் அவனை என் முலையோடு கொடு வந்து சேர்க்க வல்லார் இல்லையோ -என்கிறாள்) 1 | குன்றம் எடுத்து மழை தடுத்து இளையரோடும்
மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால் செய்தான்
முன்றில் தனி நின்ற பெண்ணை மேல் கிடந்தீர்கின்ற
அன்றிலின் கூட்டைப் பிரிக்க கிற்பவர் ஆர் கொலோ –11-2-1 | பதவுரை Show / Hideகுன்றம், Kundram - கோவர்த்தனமலையை எடுத்து, Eduthu - குடையாக வெடுத்துப்பிடித்து மழை தடுத்து, Mazhai Thaduthu - மழையைத்தடை செய்தவனாயும் இளையாரொடும், Ilaiyarodum - இளம் பெண்களோடே மன்றில், Manril - நாற்சந்தியிலே குரவை பிணைந்த, Kuravai Pinaintha - கைகோத்துக் குரவைக் கூத்தாடினவனாயுமுள்ள மால், Maal - கண்ணபிரான் என்னை மால் செய்தான், Ennai Maal Seithaan - என்னை மதிமயங்கப் பண்ணிவிட்டான் முன்றில், Munril - வாசலிலே தனி நின்ற, Thani Nindra - தனியேநின்ற பெண்ணைமேல், Pennai Mel - பனைமரத்தின் மீது கிடந்து, Kidandhu - இருந்துகொண்டு ஈர்கின்ற, Eerkingira - ஹிம்ஸிக்கின்ற அன்றிலை, Anrilai - அன்றிற்பறவையை கூட்டின், Koottin - கூட்டில் நின்றும் பிரிக்ககிற்பவர் ஆர்கொலோ, Pirikkakirbavar Arkoloo - பிரித்துவிடவல்லவர் யாரோ? (அறியேன்) |