திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1963 | பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இந்த இடையனானவன் வாயிலே வைத்து-ஸ்த்தானே சத்தான நின்று ஏங்கி ஊதுகிற குழலானது என்னோடே பாலிசமான வியாபாரங்களை பண்ணா நின்றது) 2 | பூங்குருந்து ஒசித்தானை காய்ந்தரிமா செகுத்து
ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு வன் பேய் முலை
வாங்கி யுண்ட வவ்வாயன் நிற்க விவ்வாயன் வாய்
ஏங்கு வேய்ங்குழல் என்னோடு ஆடும் இளைமையே –11-2-2 | பதவுரை Show / Hideபூ குருந்து ஓசித்து, Poo Kurunthu Osiththu - பூத்திருந்த குருந்தமரத்தை முறித்தொழித்தவனாயும் ஆனை காய்ந்து, Aanaik Kaayndhu - ரிஷபங்களைச் சீறிமுடித்தவனாயும் அரி மா, Ari Maa - (கேசியென்ற) சத்துருவான குதிரையை செகுத்து, Sekuthu - கொன்றவனாயும் ஆங்கு, Aangu - கம்ஸனது அரண்மனை வாசலிலே வேழத்தின், Vezhaththin - குவலயாபீடமென்கிற யானையினுடைய கொம்பு கொண்டு, Kombu Kondo - தந்தத்தைப் பறித்தெறிந்தவனாயும் வன்பேய், Vanpei - (பூதனையென்னும்) வலிய பேய்ச்சியினுடைய முலை, Mulai - (நஞ்சு தீற்றிய) முலையை வாங்கி, Vaangi - கையிற்பிடித்து உண்ட அவ் வாயன், Unda Av Vayan - உறிஞசியுண்ட அப்படிப்பட்ட திருப்பவளத்தை யுடையவனாயுமிருக்கிற கண்ணபிரான் நிற்க, Nirka - உதாஸீநனாயிருக்க ஆயன், Aayan - அந்த கோபாலகிருஷ்ணனுடைய வாய், Vaai - வாயிலே ஏங்கு, Aengu - ஒலிக்கின்ற இ வேய் குழல், I Vei Kuzhal - இந்த வேய்ங்குழலானது என்னோடு, Ennodu - என்திறத்திலே இளைமை ஆடும், Ilaiyai Aadum - சில சிறுச்சேவகங்கள் செய்யாநின்றது! |