திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1964 | பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அப்போது இட்ட வெற்றி மாலையை பெற வேணும் என்று ஆசைப் பட்டத்தையே நினைத்துக் கொண்டு இருக்கிற என்னை – சந்த்யா சமயத்திலே தென்றல் ஆனது வந்து நலியா நின்றது –அதுக்கு மேலே – வெளி நிலத்தில் நாகைத் தொடர்ந்து-அது கை புகுந்தால் அல்லது மீளாத படி இருக்கிற வ்ருஷத்தின் உடைய கழுத்தில் மணி யோசையானது ஆராட்சி இல்லாத இடத்தில் செயலைச் செய்யா நின்றது) 3 | மல்லொடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணி வண்ணன்
அல்லி மலர்த் தண் துழாயை நினைந்து இருந்தேனையே
எல்லியின் மாருதம் வந்தடும் அதுவன்றியும்
கொல்லை வல்லேற்றின் மணியும் கோயின்மை செய்யுமே –11-2-3 | பதவுரை Show / Hideமல்லொடு, Mallodu - மல்லர்களும் கஞ்சனும், Kanjanum - கம்ஸனும் துஞ்ச, Thunja - முடியும்படி வென்ற, Vendru - வெற்றிபெற்ற மணி வண்ணன், Mani Vannan - நீலமணிவண்ணனான கண்ணபிரானுடைய அல்லி தண் துழாய் மலரையே, Alli Than Thuzhai Malaraie - இதழ்களை யுடையதாய்க்குளி திருந்துள்ள திருத்துழாய் மாலையையே நினைந்திருந்தேனை, Ninaindhirundhenai - சிந்தித்துக்கொண்டிருக்கின்ற என்னை எல்லியில் மாருதம், Elliyil Maarudham - அந்திப்போதில் வீசும் காற்றானது வந்து, Vandhu - நானிருக்குமிடத்தில்வந்து வீசி அடும், Adum - நலிகின்றது அது அன்றியும், Athu Anriyum - அதுவுந்தவிர கொல்லை வல் ஏற்றின் மணியும், Kollai Val Aetrin Maniyum - வெளி நிலங்களில் நின்றும் மீண்டுவருகிற வலியகாளைகளின் கழுத்து மணியோசையும் கோயின்மை செய்யும், Koyinmai Seyyum - தெந்தரவுபடுத்தாநின்றது. |