திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1968 | பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அந்த காமன் -எனக்கு நன் மகன் –சாமங்கள் தோறும் காமாக்னியை தூவா நின்றான் – தனக்கு நான் அனுவர்த்த நீயையான ஆகாரம் கிடக்கச் செய்தே என்னுடைய இம்முலைகள் தாம் அவனுக்கு என்றே யாயிற்று வளருகிறது) 7 | காமன் தனக்கு முறை யல்லேன் கடல் வண்ணனார்
மா மணவாளர் எனக்குத் தான் மகன் சொல்லில்
யாமங்கள் தோறும் எரி வீசும் என்னிளம் கொங்கைகள்
மா மணி வண்ணர் திறத்தவாய் வளர்கின்றவே –11-2-7 | பதவுரை Show / Hideகாமன் தனக்கு முறை அல்லேன், Kaaman Thanakku Murai Allae - மன்மதனால் நான் நலியப்பெறுதற்கு முறையுடையே னல்லேன் சொல்லில், Sollil - ஏனென்னில் கடல் வண்ணனார், Kadal Vannanaar - கடல்வண்ணரான கண்ணபிரான் எனக்கு மா மணவாளர், Enakku Maa Manavaalar - எனக்குச்சிறந்த நாயகராயிருக்கின்றார் (இவ்வழியாலே) தான், Thaan - அந்த மன்மதன் தான் எனக்கு மகன், Enakku Magan - எனக்கு மகனாகப் பெற்றான் (அப்படியிருந்தும்) யாமங்கள் தோறு, Yaamangal Thoru - எப்போதும் எரி வீசும், Eri Veesum - நெருப்பைத் தூவுகின்றாள் என் இள கொங்கைகள், En Ilai Kongkaigal - எனது இளமுலைகளோ வென்னில் மா மணி வண்ணர் திறத்த ஆய்வளர்கின்ற, Maa Mani Vannaar Thiratha Aayvalarkindra - நீலமணிவண்ணரான அப்பெருமாளை நோக்கியே வளர்கின்றனவாயுள்ளன |