திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1969 | பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ரஷகன் பாதகன் ஆனவாறே அவன் பரிகரமும் பாதகமாம் அத்தனை ஆகாதே – அவன் பாதகனாய் புக்கவாறே அவனை அனுவர்த்தித்த அவன் பரிகரமும் பாதகமாகப் புக்கது – இவள் சன்னதியிலே வர்த்திக்கில் இவளை அனுவர்த்தித்துக் கொண்டு பிராப்த காலத்தில் விடிய வேணும் என்று நினைத்து அது செய்யாத போன விடம் தெரியாத படி போனான் – இனி இருந்த படியாலே சரீரமானது சிதிலமாய் முடிந்து பிழைக்கும் இத்தனை போக்கி இனி நமக்கு ஜீவிக்கை என்று ஒரு பொருள் இல்லை யாகாதே) 8 | மஞ்சுறு மாலிருஞ்சோலை நின்ற மணாளனார்
நெஞ்சு நிறை கொண்டு போயினர் நினைக்கின்றிலர்
வெஞ்சுடர் போய் விடியாமல் எவ்விடம் புக்கதோ
நைஞ்சுடலம் துயின்றால் நமக்கு இனி நல்லதே –11-2-8 | பதவுரை Show / Hideமஞ்சு உறு, Manju Uru - மேகமண்டலத்தைக் கிட்டி ஓங்கின (சிகரத்தையுடைய) மாலிருஞ் சோலை, Maalirunj Cholai - திருமாலிருஞ் சோலைமலையிலே நின்ற, Nindra - நித்யவாஸம் பண்ணுகிற மணாளனார், Manaalanar - எம்பெருமான் நெஞ்சம், Nenjam - (எனது) நெஞ்சிலுள்ள நின்ற, Nindra - அடக்கத்தை கொண்டு போயினார், Kondu Poyinaar - அபஹாரித்துக்கொண்டு போனவராய் நினைகின்றிலர், Ninaikindrilar - (இத்தலையை) மறந்தொழிந்தார் வெம் சுடர், Vem Sudar - ஸூர்யனானவன் போய், Poi - அஸ்தமித்துப்போய் விடியாமல், Vidiyamal - மறபடியும் உதியாமல் எவ்விடம் புக்கதோ, Evvidam Pukkatho - எங்கே புகுந்தொனித்தாலே இனி, Ini - இப்படியான பின்பு நமக்கு, Namkku - நம்முடைய உடலம், Udalam - சரீரமானது நஞ்சு, Nanju - சிதிலமாகி துயினறால், Thuyinraal - முடிந்துபோமாகில் நல்லது, Nallathu - நன்றாகும் |