திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1973 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1973பெரிய திருமொழி || (11-3–மின்னிலங்கு) - (தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அகவாயில் வாத்சல்ய பிரகாசமான திருக் கண்களை உடையனாய் – எல்லாம் பட்டுக் காண வேண்டும்படியான தோள் அழகை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை – அவனுடைய திரு நாமங்களைச் சொல்லி பாடுவதாக –ஒரு கிலேசம் இன்றிக்கே என் முலைகள் சம்ச்லேஷ சமயத்தில் போலே தன் நிறம் பெற்று வாரா நின்றது) 2
இருந்தான் என்னுள்ளத்து இறைவன் கறை சேர் பருந்தாள் களிற்றுக் கருள் செய்த செங்கண் பெருந்தோள் நெடுமாலைப் பேர்பாடி யாட வருந்தாது என் கொங்கை யொளி மன்னு மன்னே –11-3-2
பதவுரை Show / Hide
என் உள்ளத்து, En Ullaththu - எனது நெஞ்சினுள்ளே
இருந்தான், Irundhaan - வாழ்ந்திருப்பவனும்
இறைவன், Iraivan - ஸர்வஸ்வாமியும்
கறை சேர் பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த, Karai Seer Parundhaal Kalittrukku Arul Seitha - உரல் போன்று பருத்த அடியையுடைத்தான் கஜேந்திராழ்வானுக்கு அருள் செய்தவனும்
செம் கண், Sem Kan - செந்தாமரைக் கண்ணனும்
பெருந்தோள், Perundhol - பெருமைதங்கிய திருத்தோள்களையுடையனுமான
நெடுமாலை, Nedumalaik - ஸர்வேச்வரனுடைய
பேர், Pera - திருநாமங்களை
பாடி ஆட, Paadi Aada - வாயாரப்பாடிக் கூத்தாட
என் கொங்கை, En Kongai - எனது முலைகளானவை
வருந்தாது, Varundhaadhu - வருத்தமற்று
ஒளி மன்னும், Oli Mannum - ஒளிபெறும்