திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1975 | பெரிய திருமொழி || (11-3–மின்னிலங்கு) - (தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவரை அறிவேன் என்ற படி எங்கனே -என்ன –ஆஸ்ரித ஸ்பர்சம் உடைய த்ரவ்யம் ஒழிய தமக்கு தாரகம் இல்லையாம் படி -யிருக்கிறவரை எங்கனே நாம் அறியோம் -என்னும் படி தான் – யஸ்யாமதம் தஸ்யமதம் -என்னும் காட்டில் அவன் காட்டின வழியே அறிய இழிந்த நமக்கு அறியப் போகாது யென்று சொல்லலாமே – ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தை புஜிக்கப் பெற்றோம் யென்று ஹ்ருஷ்டரானவரை அறியோம் யென்று உரைக்கலாமே எனக்கு) 4 | அறியோமே யென்று உரைக்கலாமே யெமக்கு
வெறியார் பொழில் சூழ் வியன் குடந்தை மேவிச்
சிறியானோர் பிள்ளையாய் மெள்ள நடந்திட்டு
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தார் தம்மையே –11-3-4 | பதவுரை Show / Hideவெறி ஆர், Veri Ar - பாரிமளம் மிக்க பொழில் சூழ், Polil Sul - சோலைகளாலே சூழப்பட்டு வியன், Viyan - வியக்கத்தக்கதான குடந்தை, Kudanthai - திருக்குடந்தையிலே மேவி, Mevi - பொருந்தியிருப்பவரும் சிறியான் ஓர் பிள்ளை ஆய், Siriyan Or Pillai Ay - (க்ருஷ்ணாவதாரத்தில்) ஒப்பற்ற சிறு குழந்தையாய் மெல்லநடந்திட்டு, Mellanadantittu - மெதுவாக நடந்து சென்று உறி ஆர் நறு வெண்ணெய், Uri Ar Naru Venneyy - உறிகளிலே சேமித்திருந்த மணம்மிக்க வெண்ணெயை உண்டு உகந்தர் தம்மை, Undu Uganthar Thammai - வாரியமுது செய்துதிருவுள்ள முகந்தவருமான இப்பெரியவரை அறியோம் என்று உரைக்கல், Ariyom Endru Uraikkal - அறிகின்றிலோம் என்று சொல்லுதல் எமக்கு ஆமே, Emakku Aame - எமக்குத் தகுமோ? |