திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1976 | பெரிய திருமொழி || (11-3–மின்னிலங்கு) - (தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உபாசன வேளையிலே இப்படி புத்தி பண்ணி பின்பு வேறு ஒரு படியாகை அன்றிக்கே உபாசநாநுகுணம் பலம் ஆகையாலே அவ்வளவும் போனால் பெரும் பரம பிரயோஜனமாய்க் கொண்டு பற்றப்படுவதும் தாமேயாக மனசிலே வைத்தோம்) 5 | தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத்
தம்மையே ஒக்க அருள் செய்வராதலால்
தம்மையே நாளும் வணங்கித் தொழுது இறைஞ்சி
தம்மையே பற்றா மனத்து என்றும் வைத்தோமே –11-3-5 | பதவுரை Show / Hideநாளும், Naalum - எப்போதும் தம்மையே வணங்கி தொழுவார்க்கு, Thammaiye Vanangi Thozhuvaarakku - தம்மையே விநயமுடன் வணங்குமவர்கட்கு தம்மையே ஒக்க அருள் செய்வர், Thammaiye Okka Arul Seivar - தம்முடையஸாம்யத்தை அருள் செய்பவர் (எம்பெருமான்) ஆதலால், Aadhalal - ஆகையினால் தம்மையே, Thammaiye - அவர்தம்மையே நாளும் வணங்கி தொழுது இறைஞ்சி, Naalum Vanangi Thozhuthu Irainji - எப்போதும் த்ரிகரணங்களாலும் நமஸ்காரித்து தம்மையே, Thammaiye - அவர்தம்மையே என்றும், Endrum - எப்போதும் பற்று ஆ, Patru Aa - புகலாக மனத்து வைத்தோம், Manaththu Vaiththom - உறுதி கொண்டோம். |