திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1977 | பெரிய திருமொழி || (11-3–மின்னிலங்கு) - (தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் தானே பிரதம ஸூஹ்ருதமாய் நின்று வ்யாபரிக்கை யாலே பூமி அந்தரிஷாதிகளை அளந்து கொள்ளுகிற இடத்தில்-ஆகாசமானது எட்டுத் தொட்டாய் போந்தது பூமியானது திருவடிகளுக்கு போராது ஒழிவதே -யென்று இதிலே வித்தராய் – ப்ரஹ்மாதிகள் எழுதிக் கொடுத்து – கைத்தாமரை குவிக்கும் –ஸூக பிரதனான என்னுடைய ஸ்ரீ கிருஷ்ணனை வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம் உற்றார்) 6 | வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம்
உய்த்தார் ஒளி விசும்பில் ஓரடி வைத்து ஓரடிக்கும்
எய்தாது மண் யென்று இமையோர் தொழுது ஏத்தி
கைத்தாமரைக் குவிக்கும் கண்ணன் என் கண்ணனையே –11-3-6 | பதவுரை Show / Hideஒளி விசும்பில், Oli Visumbil - (சந்திரன் ஸூரியன் முதலிய) சுடர்பொருள்கள் மிக்க ஆகாசத்திலே ஓர் அடிவைத்து, Oru Adivaiththu - ஒரு திருவடியை ஓங்கவைக்க ஓர்அடிக்கும், Oru Adikkum - மற்றொரு திருவடிக்கு மண் எய்த்தாது என்று, Man Eyththathu Endru - பூமி போதாதே! ஏன்று இமையோர், Imaiyor - (பிரமன் முதலிய) தேவர்கள் தொழுது எத்தி, Thozhu Etti - வணங்கித் துதித்து கை, Kai - தங்களுடைய கைகளை தாமரை குவிக்கும், Thamarai Kuvikkum - தாமரை மொக்குபோலே அஞ்ஜலிசெய்யப்பெற்று என் கண்ணன் கண்ணனை, En Kannan Kannnai - எனக்குக் கண்போன்ற ஸ்ரீக்ருஷ்ணன் அடியார், Adiyar - அடியவாக்ள் மனத்தினில், Manathinil - தங்கள் நெஞ்சிலே வைத்தர், Vaithar - நாட்டினார்கள் வைத்து, Vaithu - அப்படி நாட்டியதனால் இன்பம் உயர்த்தார், Inbam Uyarthar - ஆநந்தத்தை அடையப் பெற்றார்க்ள். |