திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1978 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1978பெரிய திருமொழி || (11-3–மின்னிலங்கு) - (தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நம்முடைய விடாய்-அவனை ஹிருதயத்திலே வைத்து அனுசந்தித்து ஆனந்தித்தவர்கள் அளவன்றிக்கே இரா நின்றதி – பிரத்யாசத்தி யன்றே சைதில்யத்துக்கு பரிகரம் –நான் கேட்டிருந்த படி ஒழிய கிட்டக் கொள்ள மற்றைப் படியேயாய் இருந்தது – ஒரு வசன மாத்ரத்தாலே பிறககுமவை போல் அன்றிக்கே விஷயா தீனமாக பிறக்குமவையாய் இருப்பது – இவை யென்ன ஆச்சர்யங்கள்) 7
கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள் என்னோ கழன்ற விவை யென்ன மாயங்கள் பெண்ணானோம் பெண்மையோம் நிற்க வவன் மேய அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே –11-3-7
பதவுரை Show / Hide
கண்ணன், Kannan - கண்ணபிரான்
மனத்துள்ளே, Manathulle - (என்) நெஞ்சினுள்ளே
நிற்கவும், Nirkavum - எழுந்தருளியிருக்கச்செய்தேயும்
கை வளைகள், Kai Valaihal - (எனது) கையில்வளைகளானவை
என்னோ கழன்று, Enno Kazhandru - ஏனோ கழன்று போயினவே!
இவை என்ன மாயங்கள், Ivai Enna Mayangal - இவை என்ன ஆச்சரியம்!
பெண் ஆனோம், Pen Anom - பெண்குடியிலே பிறந்துள்ளநாம்
பெண்மையோம், Penmaiyom - வெகு அழகாகப் பெண்மையை உடையவர்களாயிருக்கின்றோம்
நிற்க, Nirka - இது நிற்க
ஆவன்மேய, Aavanmeya - (அந்த எம்பெருமான் விரும்பி வர்த்திக்குமிடமாய்
அண்ணல், Annal - சிறந்ததான
மயலயம், Mayalayam - திருவேங்கட மலையையும்
ஆரங்கமும், Arangamum - திருவரங்கத்தையும்
பாடோமே, Padome - பாடுகைக்குத் தடையுடையரா யிருக்கிறோமோ?