திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1979 | பெரிய திருமொழி || (11-3–மின்னிலங்கு) - (தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பரம பிராப்ய பூதனானவனை கிட்டுகையில் அருமை உண்டோ – அவன் நினையாமையாலே யன்றோ -என்னுதல் – நமக்கு அவன் பக்கல் ருசி இல்லாமை அன்றோ -என்னுதல்) 8 | பாடோமே எந்தை பெருமானைப் பாடி நின்று
ஆடாமே ஆயிரம் பேரானைப் பேர் நினைந்து
சூடாமே சூடும் துழாய் அலங்கல் சூடி நாம்
கூடாமோ கூடக் குறிப்பாகில் நன்னெஞ்சே –11-3-8 | பதவுரை Show / Hideநல் நெஞ்சே, Nal Nenje - நல்மனமே எந்தை பெருமானை, Endai Perumanai - எம்பெருமானை பாடோமே, Padome - பாடமாட்டோமோ? ஆயிரம் பேரானை, Aayiram Peraanai - ஆயிரந்திருநாமங்களையுடையனான அப்பெருமானை பாடிநின்று, Paadininru - பாடி ஆடோமே, Aadome - (மகிழ்ச்சிக்குப் போக்குவீடாக) ஆடமாட்டோமோ? போ;, Po - (அவனது) திருநாமங்களை நினைத்து, Ninaiththu - சிந்தித்து சூடும் துழாய் அலங்கல், Soodum Thuzhai Alangal - அவன் சாத்திக்கொள்ளுகிற திருத்துழாய் மாலையை சூடோமே, Soodome - அணிந்துகொள்ளமாட்டோமோ? சூடி, Soodi - அப்படி அணிந்துகொண்டு கூட, Kooda - அவனோடு கூடுகைக்கு குறிப்பு ஆகில், Kurippu Aagil - உன் இசைவு உண்டாகில் நாம் கூடோமே, Naam Koodome - நாம் கூடப்பெற மாட்டோமோ? |