திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 198 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
198பெரியாழ்வார் திருமொழி || (2-8 காப்பிடல்) - ‘’பேய்ச்சிமுலையுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசுவதஞ்சுவனே” என்ற பெரிய திருமொழிப் பாசுரத்தோடு இப்பாட்டின் இரண்டு ­மூன்றாமடிகளை ஒருபுடை ஒப்பிடுக. பார்த்தால் சிறுவன் போலிருக்கின்றாய், நீ செய்யும் செய்கையோ அதிமாநுஷம், ஆகையால் உனது உண்மையான ஸ்வரூபம் என்னாலறியப் போகிறதில்லை யென்கிறாள். 7
கள்ளச் சகடும் மருதும் கலக்கழிய உதை செய்த பிள்ளை அரசே நீ பேயை பிடித்து முலை உண்ட பின்னை உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளி உடை வெள்ளறை நின்றாய் பள்ளிகொள் போது இதுவாகும் பரமனே காப்பிட வாராய் -2 -8-7
பதவுரை Show / Hide
கள்ளம், Kallam - வஞ்சனை யுடைய
சகடும், Sagadum - சகடாஸுரனையும்
மருதும், Marudhum - யமளார்ஜுநங்களையும்
கலக்கு அழிய, Kalakku Azhiya - (வடிவம்) கட்டுக் குலைந்தழியும்படி
உதை செய்த, Udhai Seydha - (திருவடிகளால்) உதைத்துத் தள்ளிய
பிள்ளை அரசே, Pillai Arase - பிள்ளைத் தன்மையைக் கொண்ட பெருமையனே!
நீ, Nee - நீ
பேயை, Peyai - பூதனையினுடைய
முலை பிடித்து உண்ட பின்னை, Mulai pidithu unda pinnai - தாயாகவே நினைத்து முலையைப் பிடித்து (வாய் வைத்து) உண்ட பின்பு
உள்ள ஆறு, Ulla aaru - உள்ள படி
ஒன்றும் அறியேன், Ondrum ariyen - ஒன்றுமறிகிறேனில்லை;
ஒளி உடை வெள்ளறை நின்றாய், Oli udai vellarai nindrai - ஒளி உடை வெள்ளறை நின்றாய்!
இது, Idhu - இப்போது
பள்ளி கொள் போது ஆகும், Palli kol podhu aagum - படுத்து உறங்குகிற வேளையாகும்;
பரமனே!, Paramane! - அழகாலே மேம்பட்டவனே காப்பு இட வாராய்