திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1980 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1980பெரிய திருமொழி || (11-3–மின்னிலங்கு) - (தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யத்திலே அந்வயிக்கப் பெற்றிலோமோ யாகிலும் காதாசித்கமான கைங்கர்யத்திலே யாகிலும் அந்வயிக்க லாம் படி அவன் இங்கே சந்நிஹிதனாகப் பெற்றோமே இது தான் முந்துற முன்னம் உண்டாகப் பெற்றோமே -யென்று இவ்வளவால் உண்டான திருப்தியோடு தலைக் கட்டுகிறது) 9
நன்னெஞ்சே நம்பெருமான் நாளும் இனிதமரும் அன்னம் சேர் கானல் அணியாலி கை தொழுது முன்னம் சேர் வல்வினைகள் போக முகில் வண்ணன் பொன்னம் சேர் சேவடி மேல் போதணியப் பெற்றோமே –11-3-9
பதவுரை Show / Hide
நல்நெஞ்சே, Nalnenje - நல்லமனமே!
நம் பெருமான், Nam Perumaan - நமக்கு ஸ்வாமியானவன்
நாளும், Naalum - எப்போதும்
இனிது அமரும், Inidhu Amarum - திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்குமிடமாய்
அன்னம் சேர் கானல், Annam Seer Kaanal - அன்னப்பறவைகள் சேர்ந்து வாழ்கிற நெய்தல் நிலங்கள் யுடையதாய்
ஆணி, Aani - இவ்விபூதிக்கு அலங்காரமா யிருக்கின்ற
ஆலி, Aali - திருவாலியை
கை தொழுது, Kai Thozhudhu - ஸேவித்து
முன்னம் சேர் வல்வினைகள் போக, Munnam Seer Valvinaihal Poga - நெடுநாளாகச் சேர்ந்திருக்கிற கொடுவினைகளெல்லம் நீங்குகைக்கு
முகில் வண்ணன், Mugil Vannaan - காளமேகநிறத்தனான                          எம்பெருமானுடைய
பென்னம் சேர் சே அடிமேல் போது, Pennam Ser Se Adimeel Podhu - விரும்பத்தக்க திருவடிகளின்மேலுள்ள புஷ்பங்களை
அணியப் பெற்றோம், Aniyap Petrom - அணிந்துகொள்ளுமாறு பாக்கியம் பெற்றோம்