திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1981 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1981பெரிய திருமொழி || (11-3–மின்னிலங்கு) - (தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கற்றோர்கள் பூமி அடங்கலும் ஆள்வர்கள்- கற்க வேண்டா – இவை கேட்போம் யென்று செவி தாழ்த்தார்க்கு அனுபவிக்க வேண்டியது ஒரு துயர் இல்லையே) 10
பெற்றார் ஆயிரம் பேரானைப் பேர் பாடப் பெற்றான் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை கற்றோர் முற்று உலகு ஆள்வர் இவை கேட்க உற்றார்க்கு உறு துயர் இல்லை யுலகத்தே –11-3-10
பதவுரை Show / Hide
ஆயிரம் பேரானை, Aayiram Peraanai - ஆயிரந்திருநாமங்களையுடையனான எம்பெருமானுடைய
பேர், Pera - திருநாமங்களை
பாடப் பெற்றாள், Padap Petraal - பாடப்பெற்றவரான
கலியன், Kaliyan - ஆழ்வார்
ஒலிசெய், Olisei - அருளிச்செய்த
தமிழ் மாலை, Tamil Maalai - தமிழ்ச் சொல்மாலையாகிய திருமொழியை
கற்றார், Kattrar - கற்பவர்கள்
பெற்றுஆரார், Petruaar - அந்த எம்பெருமானை லபித்தும் த்ருப்தியடைய மாட்டார்க்ள்
முற்று உலக ஆள்வார், Muttru Ulaga Aalvaar - உலகங்கள் முழுவதையும் ஆளப்பெறுவாக்ள்
இவை, Ivai - இப்பாசுரங்களை
கேட்கல் உற்றார்க்கு, Kedkal Utrarkku - செவிதாழ்த்துக்கேட்கு மவாக்ளுக்கு
உலகத்தே, Ulagatthae - உலகமெங்கும்
உறு துயர் இல்லை, Uru Thuyar Illai - அநுபவிக்கக்கூடிய துக்க மொன்றுமில்லையாகும்