திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1982 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1982பெரிய திருமொழி || (11-4–நிலை) - (திருமாலின் திரு அவதாரங்களில் ஈடுபடுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன் திரு முதுகிலே மலைகள் அழிஞ்சு போகாத படி தரித்து ஏறிட்டுக் கொண்டு வருகிற ஜலம் தாரகமான வஸ்துவை – சர்வாதிகனான ஸ்ரீ சர்வேஸ்வரனை – அவன் அப்படி தன்னுருக் கொடுத்து வேற்றுருக் கொண்டு அரியன செய்து ரஷியா நின்றான் – உனக்குச் செய்ய வேண்டும் அருந்தேவை -அவனை மறவாது இருக்கை இத்தனையும் செய்யப் பாராய் மறக்க ஒண்ணாத செயல்களை அவன் செய்யா நின்றால் நீ மறவாது இருக்க வேண்டாவோ) 1
நிலையிடமெங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வளநாடு மூட விமையோர் தலையிட மற்று எமக்கோர் சரண் இல்லை யென்ன அரணாவான் என்னும் அருளால் அலைகடல் நீர் குழம்ப வகடாவோடி அகல் வான் உரிஞ்ச முதுகில் மலைகளை மீது கொண்டு வருமீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே –11-4-1
பதவுரை Show / Hide
என் மனனே, En Manane - என் நெஞ்சமே! (- (அவர்கட்கு நிலையிடம் தருவதற்காக))
எங்கும் நிலை இடம் இன்றி, Engum Nilai Idam Indri - நிலைத்து நிற்கைக்கு, ஓரிடமுமில் லாமல்
நெடு வெள்ளம், Nedu Vellam - மஹாப்ரள யவெள்ளமானது
உம்பர், Umbra - மேலுலகத்தவாக்ளுடைய
வளம் நாடு, Valam Naadu - செழிப்புற்றிருந்த ஸ்தானங்களை
மூட, Mood - வியாபித்தவளவிலே
இமையோர், Imaiyor - தேவர்கள் (அஞ்சிநடுங்கி)
எமக்கு, Emakku - எங்களுக்கு
தலை இட, Thalai Ida - தலைவணங்கி யாசிக்க
மற்று ஓர்   சரண் இல்லை, Mattru Oru Saran Illai - உன் தருவடி தவிர வேறொரு புகலிடமில்லை
என்ன, Enna - என்று விண்ணப்பஞ்செய்து நமஸ்காரிக்க
அரண் ஆவன் என்னும் அருளால், Aran Aavan Ennum Arulal - ‘உங்களுக்க நான் சரணமாகிறேன்’ என்று கொண்ட கிருபையினாலே
அலை கடல் நீர்குழாய், Alai Kadal Neerkuzhai - அலையெறிகின்றஸமுத்ரஜலம் குழம்பாகும்படியாகவும்
அதடு, Adadu - தன்கீழ் வயிற்றிலே
ஆட, Aada - அலையெறியும்படியாகவும்
ஆகல் வான், Aagal Vaan - அகன்ற ஆகாசத்திலே
ஓடி, Odi - (பிரமன் முதலியோருடைய குடியிருப்பிலே) சென்றோடி
உரிஞ்ச, Urinja - வீசும்படியாகவும்
முதுகில், Mudhugil - தன் திருமுதுகிலே
மலைகளை, Malaigalai - மலைகளை
மீது கொண்டு, Meethu Konda - ஏறிட்டுக்கொண்டு
வரும், Varum - வருகிற
மீனை மாலை, Meenai Maalai - மத்ஸ்யரூபியானஎம்பெருமான்
மறவாது, Maravathu - ஒருகாலும் மறவாமல்
இறைஞ்சு, Iraichu - வணங்குவாயாக.