திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1983 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1983பெரிய திருமொழி || (11-4–நிலை) - (திருமாலின் திரு அவதாரங்களில் ஈடுபடுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு மலை சாய்ந்து கிடக்கிறாப் போலே இருக்கிற வலியை உடைய ஆமையான ஸ்ரீ யபதி -இனி ஒரு ரஷகம் வேண்டாத அரண்) 2
செருமிகு வாள் எயிற்ற வரவொன்று சுற்றித் திசை மண்ணும் விண்ணுமுடனே வெரு வர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப இமையோர்கள் நின்று கடைய பருவரை யொன்று நின்று முதுகில் பரந்து சுழலக் கிடந்து துயிலும் அருவரை யன்ன தன்மை யடலாமையான திரு மால் நமக்கோர் அரணே –11-4-2
பதவுரை Show / Hide
செரு மிகு, Seru Miku - வலமிக்கதாய்
வாள், Vaal - ஒளிபொருந்தியதான
எயிற்ற, Eiyirtta - பற்களையுடைய
அரவு ஒன்று, Aravu Ondru - வாஸூகி நாகத்தை
சுற்றி, Suttri - (கடைகயிறாகச்) சுற்றி
திசை, Disai - திக்குக்களிலுள்ளாரும்
மண்ணும், Mannum - பூமியிலுள்ளாரும்
விண்ணும், Vinnum - மேலுலகங்களிலுள்ளாரும்
உடனே, Uthane - ஏகரூபமாக
வெருவர, Veruvara - அஞ்சி நடுங்கும்படியாகவும்
வெள்ளை வெள்ளம் முழுதும், Vellai Vellam Muzhudhum - திருப்பாற்கடலடங்கலும்
குழம்ப, Kuzhamba - குழம்பாகும்படியாகவும்
இமையோர்கள், Imaiyorkal - தேவர்கள்
நின்றுகடைய, Ninrukadai - நின்று கடைவதற்குப் பாங்காக
பரு வரை ஒன்று, Paru Varai Ondru - பெரியதொரு மலையானது
முதுகில், Mudhugil - தனது முதுகிலே
பரந்து நின்று, Parandhu Ninru - பரம்பி நின்று
சுழல, Suzhala - சுழலும்படியாக
கிடந்து, Kidandhu - அந்தமலையின் கீழே கிடந்து
துயிலும், Thuyilum - சாய்ந்துகிடவா நின்ற
அருவரை அன்ன தன்மை, Aruvarai Anna Thanmai - பெரியதொரு மலை சாய்ந்து கிடக்கிறாய் போன்றுள்ள
அடல், Adal - வலிமைகொண்ட
ஆமை ஆன, Amai Ana - கூர்மரூபியான
திருமால், Thirumal - எம்பெருமான்
நமக்கு, Namkku - நமக்கு
ஓர்அரண், Oorarang - ஒப்பற்ற ரக்ஷகன்.