திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1984 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1984பெரிய திருமொழி || (11-4–நிலை) - (திருமாலின் திரு அவதாரங்களில் ஈடுபடுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அனுரூபஸ் சவை நாத – என்னுமா போலே இதுக்கு அடைய-இவை அடையத் திருவடிகளிலே சேர்ந்து அருளுவதற்கு தகுதியான காரணம் ஸ்ரீ வராஹ கல்பாதியிலே மஹா வராஹமாய் ரஷித்த ஸ்ரீ திரு மேனி – அது நம்மை அடிமை கொள்ளும் நிர்வாஹ வஸ்து) 3
தீதறு திங்கள் பொங்கு சுடர் உம்பர் உம்பர் உலகு ஏழினோடும் உடனே மாதிர மண் சுமந்த வடகுன்று நின்ற மலை யாறும் ஏழு கடலும் பாதமர் சூழ் குளம்பினக மண்டலத்தின் ஒரு பாலோடுங்க வளர் சேர் ஆதி முன் ஏனமாகிய யரணாய மூர்த்தி யது நம்மை யாளும் அரசே –11-4-3
பதவுரை Show / Hide
தீது அறு, Theethu Aru - குற்றமற்ற (- (ஆகிய இவையெல்லாம்))
திங்கள், Thingal - சந்திரனும்
பொங்கு சுடர், Pongu Sudar - தபிகின்ற தேஜஸ்ஸையுடைய ஸூர்யனும்
உம்பா, Umbha - தேவர்களும்
உம்பர் உலகு எழினோடும் உடனே, Umbar Ulagu Ezhinodum Udane - மேலுலகங்களேழும்
மாதிரம், Madhiram - திசைகளும்
மண் சுமந்த வடகுன்று, Man Sumandha Vadakuntru - பூமியைத் தாரிக்கினற மேருபர்வதமும்
நின்ற மலை ஆறும், Nindra Malai Aarum - மிச்சமான குவபர்வதங்காறும்
ஏழு கடலும், Ezhu Kadhalum - ஸப்த ஸாகரங்களும்
புர்தம் அமா, Purtham Ama - திருவடிகளிலே பொருந்தியுள்ள
சூழ்குளம்பின், Soolkulambin - பரம்பியதிருக்குளம்பினுடைய
அகம் மண்டலத்தின், Aham Mandalathin - உள் வலயத்தின்
ஒரு பால், Oru Paal - ஏகதேசத்திலே
ஒடுங்க, Odunga - அடங்கும்படி
வளர், Valar - வளரா நிற்பவனாய்
சேர், Ser - தகுதியான
ஆதி, Aadhi - காரணபூதனாய்
முன், Mun - வராஹகல்பாதியிலே
ஏனம், Eyanam - ஆகி மஹாவராஹரூபியாய்
அரண் ஆய, Aran Aaya - ரக்ஷகனாய் நின்ற
மூர்த்தி அது, Moorthy Adhu - அந்த ஸ்வாமியே
நம்மை ஆளும் அரசு, Nammai Aalum Arasu - நம்மை அடிமைகொள்ளவல்ல பிரபு