திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1985 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1985பெரிய திருமொழி || (11-4–நிலை) - (திருமாலின் திரு அவதாரங்களில் ஈடுபடுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வளைந்த திரு உகிர்களை உடையவன் -வலி மிக்க பெரிய மறத்தை உடைய ஹிரண்யன் வடிவைக் கண்டு அத்தை ஒன்றாக மதியாதே கிட்டு ஸ்ரீ திரு வாழிக்கு இரை போதாது யென்று ஒரு ஸ்ரீ உகிராலே- இரண்டு பிளவாம்படி இட்ட குழி மஹா பிரளயத்தில் மும்மடங்கு பெரிது) 4
தளையவிழ் கோதை மாலை யிருபால் தயங்க எரி கான்று இரண்டு தறு கண் அள வெழ வெம்மை மிக்க வரியாகி யன்று பரியோன் சினங்கள் அவிழ வளை யுகிர் ஒளி மொய்ம்பின் மறவோனதாகம் மதியாது சென்று ஒரு உகிரால் விள வெழ விட்ட குட்டமது வையமூடு பெரு நீரின் மும்மை பெரிதே –11-4-4
பதவுரை Show / Hide
அன்று, Anru - முன்பொரு காலத்தில்
தளை அவிழ் கோதை மாலை, Thalai Avizh Kothai Maalai - கட்டுஅவிழ்கின்ற (விகஸிக்கின்ற) பூமாலையானது
இருபால், Irupaal - இரண்டு பக்கத்திலும்
தயங்க, Thayanga - அசைந்து விளங்க
எரிகான்ற, Erikaantra - அழலை உமிழா நின்றுள்ள
இரண்டு தறுகண், Irandu Tharukan - வட்டணித்த இரண்டு திருக்கண்களும்
அளவு எழ, Alavu Ezha - அளவு கடந்து மலர(ப்பெற்ற)
வெம்மைமிக்க அரி ஆகி, Vemmaimikka Ari Aagi - பயங்கரமான நரஸிம்ஹரூபியாய்
பாரியோன், Paariyon - ஸ்தூலகாயனான இரணியனுடைய
சினங்கள், Sinangal - பவகத் பாகவத விஷயங்களிலுண்டான மாச்சாரியமெல்லாம்
ஆவிழ, Aavizha - குலையும்படியாக
வளைஉகிர் ஆளி, Valaiugir Aali - வளைந்த திருநகங்களை யுடையனாயக் கொண்டு
மொய்ம்பில் மறவோனது, Moympil Maravonathu - வலிமையோடு கூடித் வேஷத்தை யுடையனான இவ்விரணியனது
ஆகம், Aagam - உடலை
மதியாது சென்று, Madhiyadhu Sendru - ஒருபொருளாக நினைக்காமல்கிட்டி
ஒரு உகிரால், Oru Ukiral - ஒரு திருநகத்தாலே
பிளவு எழ இட்ட, Pilavu Ezha Itta - இரண்டு பிளவாம்படி செய்ததனாலுண்டான
குட்டம் அது, Kuttam Adhu - ரக்தமடுவானது
வையம், Vaiyam - இவ்வுலகத்தையெல்லம்
மூடு, Moodu - வியாபிக்கின்ற
பெரு நீரில், Peru Neeril - பிரளயப் பெருவெள்ளத்திற் காட்டில்
மும்மை பெரிது, Mummaiy Peridhu - மும்மடங்கு பெரிதாயிருந்தது!