திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1986 | பெரிய திருமொழி || (11-4–நிலை) - (திருமாலின் திரு அவதாரங்களில் ஈடுபடுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மந்தரத்துக்கு மேல் போய் சந்த்ராதித்யர்கள் ஸ்தானத்து அளவிலே நின்று ஆதரிக்க ப்ரஹ்மா-நம் இருப்பில் திருவடிகள் வந்தது -யென்று புறப்பட்டு ஆஸ்ரயிக்கும் படி – வளரா நிற்பதாய் – சேரக் குடி ஏறி இருக்கிற உபரிதன லோகங்கள் ஏழும் நடுவே போம்படி நடத்தின திருவடிகள் நமக்கு ரஷகம்) 5 | வெந்திறல் வாணன் வேள்வியிடம் எய்தி அங்கோர் குறளாகி மெய்ம்மை உணர
செந்தொழில் வேத நாவின் முனியாகி வையம் அடி மூன்று இரந்து பெறினும்
மந்தர மீது போகி மதி நின்று இறைஞ்ச மலரோன் வணங்க வளர் சேர்
அந்தரம் ஏழினூடு செல வுய்த்த பாதமது நம்மை யாளும் அரசே –11-4-5 | பதவுரை Show / Hideவெம் திறல், Vem Thiral - கொடிய வலிமையையுடையனான வாணன், Vaanan - மஹாபலியினுடைய வேள்வி இடம், Velvi Itam - யாகபூமியிலே அங்கு ஓர் குறள் ஆகி, Anku Or Kural Aki - விலக்ஷணவாமனமூர்த்தியாய்க் கொண்டு எய்தி, Eyti - எழுந்தருளி மெய்ம்மை உணர, Meimmai Unar - இவன் மெய்யான யாசகன் என்று மாவலி தொரிந்து கொள்ளுமாறு செம் தொழில் வேதம்நாவின் முனி ஆகி, Sem Tozhil Vedamnavin Muni Aki - நல்ல அனுஷ்டானங்களில் உபயோகப்படுகின்ற வேதத்தை நாவினால் உச்சரிக்கின்ற ரிஷிபோல நின்று மூன்று அடிஐவயம், Munru Atiaivayam - மூவடி நிலத்தை இரந்து, Irantu - யாசித்து பெறினும், Perinum - பெற்றவாறே மந்தரம் மீது போகி, Mantiram Mitu Poki - மந்தரத்துக்கு மேலேபோய் அளாவி மதிநின்று இறைஞ்ச, Matininru Irainca - சந்திரன் நின்றுதொழும்படியாகவும் மலரோன், Malaron - நான்முகக்கடவுள் வணங்க, Vanangka - வணங்கும்படியாகவும் வளர்சேர், Valarcer - வளர்ந்து செல்லுவதாய் அந்தரம் எழின் ஊடு, Antaram Elin Utu - மேலுலகங்களேழினுள்ளும் செலஉய்த்த பாதம்அது, Celauytta Patamatu - செல்லும்படி நடத்தப்பெற்ற அந்தத்திருவடி யானது நம்மை அரசு ஆளும், Nammai Aracu Alum - நம்மை ரக்ஷிக்கக் கடவது. |