திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1987 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1987பெரிய திருமொழி || (11-4–நிலை) - (திருமாலின் திரு அவதாரங்களில் ஈடுபடுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வல்லபர்-ஸ்ரீ யபதி -ஈஸ்வரன் உடைய சர்வ இந்த்ரியங்களையும் அபஹரிக்க வல்ல நீளைப் பிராட்டிக்கு வல்லவர்-யச்யஸா -என்னும்படி இவளை உடையவர் -என்னும் பெரும் புகழை உடையவர் – சர்வ லோகங்களையும் வயிற்றிலே வைத்து ரஷித்து ரஷ்யத்தின் அளவில்லாத ரஷகத்வ பாரிப்பை உடையராய் இப்படிக்கொத்தவர் நம்முடைய் ஆஸ்ரயணத்தின் சிறுமை பாராதே யாவதாத்மபாவியாக நம்மை அடிமை கொள்வர்) 6
இரு நில மன்னர் தம்மை யிரு நாலும் எட்டும் ஒரு நாலும் ஒன்றும் உடனே செரு நுதலூடு போகியவராவி மங்க மழு வாளில் வென்ற திறலோன் பெரு நில மங்கை மன்னர் மலர் மங்கை நாதர் புல மங்கை கேள்வர் புகழ் சேர் பெரு நிலம் உண்டு உமிழ்ந்த பெரு வாயராகியவர் நம்மை யாள்வர் பெரிதே –11-4-6
பதவுரை Show / Hide
இருநிலம் மன்னா; தம்மை, Irunilam Manna Tammai - பரம்பின இப்பூமண்டலத்திலிருந்த அரசர்களின்
இருநாலும் எட்டும் ஒரு நாலுடனே ஒன்றும், Irunalum Ettum Oru Nalutane Onrum - இருபத்தொரு தலைமுறையளவும்
செரு நுதலூடு போகி, Ceru Nutalutu Poki - பூசற்களத்தின் முகப்பிலே சென்று
அவர் ஆவி மங்க, Avar Avi Manka - அவ்வரசர்களின் உயிர்முடியும்படியாக
மழுவாளில், Mazhuvaalil - கோடாலிப்படையினால்
வென்ற, Vendru - கொன்றொழித்த
திறலோன், Thiralon - மிடுக்கையுடையராய்
நெருநிலம் மங்கை மன்னா;, Nerunilam Mangai Manna - பூமிப்பிராட்டிக்கு நாயகராய்
மலர் மங்கை நாதர், Malar Mangai Naathar - பெரிய பிராட்டியர்க்கும் நாதராய்
புலம் மங்கை கேள்வர், Pulam Mangai Kelvvar - தன்னுடைய ஸகலேந்திரியங்களையும் இழுக்கவல்ல நீளா தேவிக்கும் நாயகராய்
புகழ் சேர், Pugazh Ser - மஹாயசஸ்வியாய்
பெரு நிலம், Peru Nilam - பூமியை முழுதும்
உண்டு, Undu - திருவயிற்றில் வைத்துநோக்கி
உமிழ்ந்த, Umizhndha - பின்பு வெளிப்படுத்தியருளின
பெருவாயர் ஆகியவர், Peruvaayar Aagihavar - பெரிய திருவாயையுடையரான பெருமாள்
பெரிதே, Peridhe - மேலுள்ள மஹாகாலமெல்லம்
நம்மைஆள்வர், Nammai Aalvar - நம்மை அடிமைகொள்வர்