திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1989 | பெரிய திருமொழி || (11-4–நிலை) - (திருமாலின் திரு அவதாரங்களில் ஈடுபடுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (லோகத்தில் அஞ்ஞானம் தீர்ந்து தன்னைக் கண்டார் எல்லாரும் ஆனந்த நிர்பரராம் படியாக கேட்பார் உபசத்தி பண்ண மாட்டாமையாலே இழக்க வேண்டாத ஸ்ரீ திர்யக்காய் – ஸ்ரீ சாரதியாய் உபதேசித்தால் போலே ஹிதானுசந்தானம் பண்ணக் கடவ அவனே ரஷகன்) 8 | முன்னுலகங்கள் ஏழும் இருள் மண்டி யுண்ண முதலோடு வீடும் அறியாது
என்னிது வந்தது என்ன விமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய
பின்னையும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்த்து இவ் வையம் மகிழ
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்தவது நம்மை யாளும் அரசே –11-4-8 | பதவுரை Show / Hideமுன், Mun - முன்பொருகால் உலகங்கள் எழும், Ulagangal Ezhum - ஸகல லோகங்களையும் மண்டி உண்ண, Mandi Unna - வியாபிக்கும்படியாகவும் இமையோர், Imaiyor - தேவர்கள் முதலோடு வீடும் அறியாது, Muthalodu Veedu Ariyaadhu - ஆதியுமந்தமுமறியாமல் எண் இது வந்தது என்ன, En Idhu Vandhadhu Enna - திடீரென்று இப்படியான விது என்னோ? என்று திசைப்ப, Thisaippa - திகைத்து நிற்கும்படியாகவும் எழில் வேதம், Ezhil Vedham - அழகிய வேதங்கள் இன்றி முறைய, Indri Muraiya - இல்லாமல் மறைந்து போனவளவிலே பின்னையும், Pinnaim - மீண்டும் வானவர்க்கும், Vaanavarkkum - தேவர்களுக்கும் முனிவர்க்கும், Munivarkkum - மஸர்ஷிகளுக்கும் நல்கி, Nalki - அருள் கூர்ந்து இவையம், Ivaiyam - இவ்வுலகமானது இருள் தீர்ந்துமகிழ, Irul Theerndumagizha - இருளால் விடுபட்டு ஆநந்திக்கும்படியாக அன்னம் அது ஆய் இருந்து, Annam Adhu Aayi Irundhu - ஹம்ஸரூபியாய்த் திருவவதாரித்து அங்கு, Angu - அப்போது அறம் நூல், Aram Nool - வேத சாஸ்திரங்களை உரைத்த, Uraiththa - அருளிச்செய்த அது, Adhu - அந்தப் பரஞ்சோதியே நம்மை அரசுஆளும், Nammai Arasuhalum - நம்மை அடிமை கொள்ளும் |