திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1993 | பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ராமன் சௌலப்யம் அனுபவித்தார் முதல் பாசுரத்தில் இது முதல் எட்டாம் பாசுரம் வரை ஸ்ரீ கிருஷ்ணன் சௌலப்யம் அனுபவிக்கிறார் – கர்ம வஸ்யர் உடைய ரஷணத்துக்கு வந்து பிறக்குமவன் ஆகையாலும் அவன் தான் சர்வ காரண பூதன் ஆகையாலும்-நமக்கு ஓர் குறை உண்டோ -என்கிறது) 2 | தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காணேடீ
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் நான் முகற்கு
தந்தை காண் எந்தை பெருமான் காண் சாழலே –11-5-2 | பதவுரை Show / Hideஏடீ, Eadi - தோழீ! தந்தை, Thandai - தந்தையாகிய வஸுதேவருடைய தளை, Thalai - கால்விலங்கு கழல, Kazhala - கழன்று விழும்படியாக தோன்றி, Thonri - அவதரித்து போய், Poi - மதுரையில் நின்றும் பெயர்ந்து போய் ஆய்ப்பாடி, Aayppadi - திருவாய்ப்பாடியில் நந்தன், Nandan - நந்தகோபருடைய குலம், Kulam - குலத்திற்கு (க்கொழுந்தான) மதலை ஆய், Madalai Aay - பிள்ளையாய் வளர்ந்தான் காண், Valarnthaan Kaan - வளர்ந்தானன்றோ சாழலே, Saalale - தோழீ! நந்தன் குலம் மதலை ஆய் வளர்ந்தான், Nandan Kulam Madalai Aay Valarnthaan - இடைப்பிள்ளையாய் வளர்ந்தவன் நான் முகற்கு, Naan Mugarku - நான் முகனுக்கு தந்தை காண், Thandai Kaan - தகப்பன் காண் எந்தை பெருமான் காண், Endhai Perumaan Kaan - என்னுடைய குலநாதன் காண் |