திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1994 | பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் நேரே கிடையா விட்டால் களவு கண்டாகிலும் ஜீவிக்குமவன் ஆகையாலும் ரஷணத்தில் பர்யாப்தி பிறந்து இராதவன் ஆகிலும் நமக்கு ஒரு குறை உண்டோ) 3 | ஆழ் கடல் சூழ் வையகத்தார் ஏசப் போய் ஆய்ப்பாடித்
தாழ் குழலார் வைத்த தயிர் உண்டான் காணேடீ
தாழ் குழலார் வைத்த தயிர் உண்ட பொன் வயிற்று இவ்
வேழ் உலகும் உண்டு இடமுடைத்தால் சாழலே –11-5-3 | பதவுரை Show / Hideஏடீ, Eadi - தோழீ! ஆழ்கடல் சூழ் வையகத்தார், Aazhkaadal Sooz Vayakaththaar - ஆழ்ந்தகடலால் சூழப்பட்ட பூமியிலுள்ளாரெல்லாரும் ஏச, Eesa - ஏசும்படியாக ஆய்ப்பாடி, Aayppadi - ஏசும்படியாக தாழ் குழலார் வைத்த, Thaal Kuzhalaar Vaiththa - தாழ்ந்த கூந்தலையுடைய இடைப்பெண்கள் சேமித்து வைத்திருந்த தயிர், Thayir - தயிரை உண்டான் காண், Undaan Kaan - வயிறா உட்கொண்டவன்ன்றோ சாழலே, Saalale - தோழீ! தாழ் குழலார் வைத்த தயிர் உண்டபொன் வயிறு, Thaal Kuzhalaar Vaiththa Thayir Undapon Vayiru - இடைச்சிகள் வைத்திருந்த தயிரை உட்கொண்ட திருவயிறானது இஏழ் உலகும் உண்டும், Iyaazh Ulakum Undum - இவ்வுலகங்களை யெல்லாம் அமுது செய்தவளவிலும் இடம் உடைத்து, Idam Udaiththu - இனன்மும் அவகாசத்தை யுடையதாயிருக்கின்றது. ஆல், Aal - ஆச்சரியம் |