திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1995 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1995பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் ப்ரவணர் ஆகையாலே அது பின்னாட்டுகிறபடி – மனுஷ்யத்வே பரத்வம் அறியாதார்க்கு தயிரை வருந்திக் கடைந்து உறியிலே சேமித்து வைத்த அன்று கடைந்த வெண்ணெயை உண்டு உகந்தான் – சம்சாரிக்கு பகவல் லாபம் போலே அவனுக்கு இது – இவ் வயிற்றுக்கு கடல் சூழ்ந்த லோகம் அடையப் போராது காண்) 4
அறியாதார்க்கு ஆனாயனாகிப் போய் ஆய்ப்பாடி உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தான் காணேடீ உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்த பொன் வயிற்றுக்கு ஏறி நீர் உலகனைத்தும் எய்தாதால் சாழலே –11-5-4
பதவுரை Show / Hide
ஏடீ, Eadi - தோழீ!
அறியா தார்க்கு, Ariyaa Thaarakku - ஒன்றுமறியாதவர்களுக்குள்ளே
ஆன் ஆயன் ஆகி, Aan Aayan Aagi - மாடுமேய்க்குமிடைக்குலத்தவனாய்
ஆய்ப்பாடி, Aayppadi - இடைச்சேரியிலே
உறி ஆர், Uri Aar - உறிகளிலே பொருந்தின
நறு வெண்ணெய், Naru Vennyei - மணம்மிக்க வெண்ணெயை
உண்டு, Undu - (களவுசெய்து) உட்கொண்டு
உகந்தான் காண், Uganthaan Kaan - ஸந்தோஷதித்தான் காண்
சாழலே, Saalale - தோழீ!
உறி ஆர் நறுவெண்ணெய் உண்டு உகந்த, Uri Aar Naruvennyei Undu Ugantha - உறிகளிலே பொருந்திய நறுவெண்ணெயை உட்கொண்டு உவந்த
பொன் வயிற்றுக்கு, Pon Vayirukku - திருவயிற்றுக்கு
எறி நீர் உலகு அனைத்தும், Eri Neer Ulagu Anaiththum - கடல்சூழ்ந்த லோகங்களெல்லாம்
எய்தாது, Eydhaadhu - போதாது
ஆல், Aal - ஆச்சரியம்