திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1997 | பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கேட்டார் நெஞ்சு ஈரும் படி த்வனிக்க இடையர் மனஸ் களிப்ப மன்றிலே மரத்தைக் காலிலே கட்டி ஆடினான் காண் – இப்படி இடையர் கண் வட்டத்திலே நிற்கிற வஸ்துவை ப்ரஹ்மாதிகள் கண் வட்டத்திலே கண்டு அறிவார் இல்லை) 6 | கன்றப் பறை கறங்கக் கண்டவர் தம் கண் களிப்ப
மன்றில் மரக்கால் கூத்தாடினான் காணேடீ
மன்றில் மரக்கால் கூத்தாடினான் ஆகிலும்
என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே –11-5-6 | பதவுரை Show / Hideஏடீ, Eadi - தோழீ! (- (மன்றில் மரக்கால்கூத்து ஆடினான் ஆகிலும்)) கன்ற, Kanru - (விரோதிகளின் நெஞ்சு) கன்றும்படியாக பறை கறங்க, Parai Karangka - பறைகள் ஒலிக்கவும் கண்டவர் தம், Kandavar Tham - பார்த்தவர்களினுடைய கண், Kan - கண்களானவை களிப்ப, Kalippa - கனிக்கவும் மன்றில், Manril - நாற்சந்திகளிலே மரக்கால் கூத்து ஆடினான் காண், Marakkaal Koothu Aadinan Kaan - மரத்தைக் காலிலேகட்டி யாடுவதொரு கூத்தை ஆடினானன்றோ? சாழலே, Saalale - தோழீ! இமை யோர்க்கும், Imai Yorkkum - தேவர்களுக்கும் என்றும், Endrum - என்றைக்கும் அரியன், Ariyan - அருமைப்பட்டவன் காண். |