திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1999 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1999பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்படி தாழ்வு செய்தவன் லோகத்தில் ராஜாக்கள் ஆனார் முடி மேல் மாலையிலே காண் திருவடிகளை வைத்துக் கொண்டு இருப்பது – ராஜாதி ராஜ சர்வேஷாம் -இத்யாதி) 8
பார் மன்னர் மங்கப் படை தொட்டு வெஞ்சமத்துத் தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் காணேடீ தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான்ஆகிலும் தார் மன்னர் தங்கள் தலை மேலான் சாழலே –11-5-8
பதவுரை Show / Hide
ஏடீ, Eadi - தோழீ! (- (தேர் மன்னற்கு ஆய் அன்று தேர் ஊர்ந்தான்))
அன்று, Anru - பாரதப்போர்நிகழ்ந்த அக்காலத்தில்
பார், Paar - பூமியிலுள்ள
மன்னர், Mannar - அரசாகள் யாவரும்
மங்க, Manga - மாளும்படியாக
வெம் சமத்து, Vem Samathu - வெவ்விய போர்க்களத்திலே
படைதொட்டு, Padaithottu - (பிரதிஜ்ஞைக்குமாறாக)ஆயுதமெடுத்து
தேர்மன்னற்கு, Thermannarku - தேர்வீரனான அரிஜுனனுக்கு
ஆய், Aai - துணையாய்(ஸராதியாகி)
தேர் ஊர்ந்தான் காண், Ther Oornthaan Kaan - தேரைநடத்தினான் காண்.
சாழலே, Saalale - தோழீ!
தார் மன்னர் தங்கள், Thaar Mannar Thangal - வெற்றி மாலைபுனையும் அரசர்களுக்கெல்லாம்
தலை மேலான், Thalai Melan - தலைமேல் வீற்றிருப்பவன் காண்.