திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2000 | பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வடிவு அழகாலும் வரையாதே தீண்டும் படி யாலும் ஆஸ்ரிதர்க்கு தாழ்வு செய்யும்படியாலும் – கிருஷணாவதாரத்தோடு போலியாய் இறே ஸ்ரீ வாமன அவதாரம் இருப்பது – உதாரனாய் இருக்கிற மஹா பலி யஞ்ஞ பூமியிலே அவன் கண் வட்டத்துக்கு உள்ளே நின்று மூன்றடி மண் இரந்தான் காண் – அவன் கண் வட்டத்தே நின்ற இவனை நாட்டில் கண்டவர் இல்லை கிடாய்) 9 | கண்டார் இரங்கக் கழியக் குறள் உருவாய்
வண்டாரான் வேள்வியில் மண்ணிரந்தான் காணேடீ
வண்டாரான் வேள்வியில் மண்ணிரந்தான் ஆகிலும்
விண்டு ஏழ் உலகுக்கும் மிக்கான் காண் சாழலே –11-5-9 | பதவுரை Show / Hideஏடீ, Eadi - தோழீ! (- (வண்தாரான் வேள்வியில் மண் இரந்தான் ஆகிலும்)) கண்டார், Kandaar - பார்த்தவர்களெல்லாரும் இரங்க, Iranga - மனமிரங்கும்படி கழிய குறள் உரு ஆய், Kazhiya Kurai Uru Aai - மிகக் குள்ளவடிவுடையவனாய்க் கொண்டு வண்தாரான், Vandthaaran - வள்ளல்தனத்தைக் காட்டுகின்ற தனிமாலையையணிந்த மாவலியினுடைய வேள்வியில், Velviyil - யாகபூமியிலே மண் இரந்தாண் காண, Man Irandhaan Kaan - மண்ணையாசித்தானன்றோ சாழலே, Saalale - தோழீ! விண்டு, Vindhu - விஷ்ணுவாய் ஏழ் உலகுக்கும் மிக்கான் காண், Ezhu Ulagukkum Mikkaan Kaan - எல்லாவுலகத்தினும் மேம்பட்டவன் காண் |