திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2003 | பெரிய திருமொழி || (11-6–மைந்நின்ற) - (உலகத்தைப் ப்ரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தமை கூறி, உலகிற்கு உபதேசித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவனுக்கு புறம்பாய் இருப்பது ஒன்றைப் பற்றி இவனைக் கை விட்டி கோளோ- லோகத்தின் உடைய சத்தை அவனுடைய பிரசாதாயத்தம் என்னும் இடம் அறியீர்களோ) 2 | நில்லாத பெரு வெள்ளம் நெடு விசும்பின் மீதோடி நிமிர்ந்த காலம்
மல்லாண்ட தடக் கையால் பகிரண்டம் அகப்படுத்த காலத்தன்று
எல்லாரும் அறியாரோ வெம்பெருமான் உண்டு உமிழ்ந்த வெச்சில் தேவர்
அல்லாதார் தாம் உளரே யவன் அருளே யுலகாவது அறியீர்களே –11-6-2 | பதவுரை Show / Hideநில்லாத, Nilladha - ஓரிடத்திலும் நிலைநில்லாத பெரு வெள்ளம், Peru Vellam - மஹாப்ரளய வெள்ளமானது நெடு விசும்பின் மீது, Nedu Visumpin Meedhu - நெடுகிய ஆகாசத்தின் மீது ஓடி, Odi - வழிந்தோடி நிமிர்ந்தகாலம், Nimirndhagaalam - ப்ரவஹித்தபோது மல் ஆண்ட தடகையால, Mal Aanda Thadakaiyaal - மிடக்கையுடைய பெரிய திருக்கையினாலே பகிரண்டம், Pagirandam - பகிரண்டங்களை அகப்படுத்த காலத்து அன்று, Akappadutha Kaalathu Andru - (பிரளயங்கொள்ளாதபடி) அகப்படுத்திக்கொண்ட அந்த ஸமயத்திலே தேவர் எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் (என்று) எல்லோரும் அறியாரோ, Thevar Emperumaan Undu Umizhndha Echchil Enru Ellorum Ariyaaro - தேவதைகளெல்லாம் எம்பெருமானது திருவயிற்றில் புகுந்து புறப்பட்ட எச்சில் என்பதை எல்லாரும் அறியமாட்டார்களே அல்லாதார் தாம், Alladhaar Thaam - அப்படி எச்சிலாகாத தேவதைகள் உளரே, Ulaare - உண்டோ? (இல்லை) உலகு, Ulaku - லோகமானது ஆவது, Aavathu - ஸத்தை பெற்றிருப்பது அவன் அருளே, Avan Arule - அப்பெருமானுடைய க்ருபையின் அதீன மென்பதை அறியீர்களே, Ariyeergale - அறிகின்றிலீர்களோ? |