திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2005 | பெரிய திருமொழி || (11-6–மைந்நின்ற) - (உலகத்தைப் ப்ரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தமை கூறி, உலகிற்கு உபதேசித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இனி இவர்களுக்கு ரஷகர் யாரும் இல்லை -என்று த்ரை லோகத்தையும் முறையாலே சத்வஸ்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் முழங்கா நின்றுள்ள ஒளி சேர்ந்து இருந்து உள்ள ஸ்ரீ திரு வயிற்றிலே வைத்து உம்மை உய்யக் கொண்ட –கனிந்து இருந்து களாம் போலே இருந்துள்ள ஸ்ரீதிரு உடம்பை உடைய ஒருவனையே – கழல் தொழுமா கல்லீர்களே) 4 | பனிப் பரவித் திரை ததும்பப் பார் எல்லாம் நெடும் கடலேயான காலம்
இனிக் களை கண் இவர்க்கு இல்லை என்று உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி
முனித்தலைவன் முழங்கொளி சேர் திரு வயிற்றில் வைத்து உம்மை யுய்யக் கொண்ட
கனிக்கவளத் திருவுருவத் தொருவனையே கழல் தொழுமா கல்லீர்களே –11-6-4 | பதவுரை Show / Hideபார் எல்லாம், Paar Ellam - பூமியடங்கலும் பனி பாவை, Pani Paavai - குளிர்ந்துபரந்திருக்கிற திரை, Thirai - அலைகளானவை ததும்ப, Thadumba - எறியும்படி நெடுங்கடலே ஆன சாலம், Nedungadale Aana Saalam - மஹாப்ரளய வெள்ளமே பரந்தபோது இவர்க்கு, Ivarkku - இவ்வுலகத்தார்க்கு இனி, Ini - இனிமேல் களை கண் இல்லை என்று, Kalai Kan Illai Endru - ரக்ஷகராவார் ஆருமில்லை என்று உலகம் ஏழினையும், Ulagam Ezhinaiyum - உலகங்களெல்லாவற்றையும் ஊழில் வாங்கி, Oozhil Vaangi - முறையாலே வாங்கி முழங்கு ஒலி சேர் திருவயிற்றில் வைத்து, Muzhangu Oli Seer Thiruvayittril Vaiththu - மஹாகோஷம் நிரம்பிய திருவயிற்றினுள் வைத்து உம்மை, Ummmai - உங்களை உய்யக் கொண்ட, Uyya Konda - உஜ்ஜீவிப்பித்தருளினவனும் முனி தலைவன், Muni Thalaivan - ஸாத்விகர்களில் தலைவனும் கனி களவம் திரு உருவத்து ஒருவனையே, Kani Kalavam Thiru Uruvaththu Oruvanaiye - கனிந்த களாப்பழம் போன்ற திருவுருவத்தை யுடையனுமான ஒரு பெருமானையே கழல் தொழும் ஆ, Kazhal Thozhum Aa - திருவடிதொழும்படியை கல்லீர்களே, Kalleergale - கற்கமாட்டீர்களோ? |