திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2006 | பெரிய திருமொழி || (11-6–மைந்நின்ற) - (உலகத்தைப் ப்ரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தமை கூறி, உலகிற்கு உபதேசித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சைதன்யம் உண்டாகில் வரையாதே எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்து அத்தாலே ப்ரஹ்மாதிகளுக்கு நிர்வாஹகனாய் – அளவுடையவனாய் இருந்துள்ளவனுடைய பெயரான திரு நாமங்களையே பேசீர்களே) 5 | பாராரும் காணாமே பரவை மா நெடும் கடலேயான காலம்
ஆரானும் அவனுடைய திரு வயிற்றில் நெடும் காலம் கிடந்தது உள்ளத்து
ஓராத உனர்விலீர் உணருதிரேல் உலகளந்த உம்பர் கோமான்
பேராளான் பேரான பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே –11-6-5 | பதவுரை Show / Hideபார், Paar - பூமியிலே (- (நீங்கள்)) ஆரம் காணாமே, Aaram Kaanamae - ஒருவரையும் காணவொண்ணாதபடி பாவை மாநெடு கடலே ஆன காலம், Paavai Maanedu Kadaley Aana Kaalam - பரந்திருந்துள்ள மஹா ப்ரளய வெள்ளமேயான சமயத்தில் ஆரானும், Aaranum - எவரும் அவனுடைய திருவயிற்றில், Avanudaiya Thiruvayittril - அப்பெருமானுடைய திருவயிற்றில் நெடுங்காலம் கிடந்த்து, Nedungaalam Kidandthu - வெகுகாலம் வரையில் அடங்கியிருந்ததை உள்ளத்து, Ullathu - நெஞ்சிலே ஓராத, Ooradha - சிந்திக்கப்பெறாத உணர்வு இலீர், Unarvu Ilir - மூடர்களே! உணருதிர் எல், Unaruthir El - சேதனார்களாயிருப்பீர்களாகில் உலகு அளந்த, Ulaku Alandha - உலகங்களை யளந்தருளின உம்பர் கோமான், Umbar Koman - நித்யஸூரிநாதனாய் பேராளன், Peralan - பெருமைபொருந்தியவனான எம்பெருமானுடைய பேர் ஆன, Per Aan - திருநாமங்களான பேர்கள் ஆயிரங்களுமே, Perkal Aayirangalume - ஸஹஸ்ரநாமங்களையே பேசீர்கள், Pesirgal - பேசுங்கள் |