திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2009 | பெரிய திருமொழி || (11-6–மைந்நின்ற) - (உலகத்தைப் ப்ரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தமை கூறி, உலகிற்கு உபதேசித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ரஷ்யத்தின் அளவில்லாத ரஷண தர்மத்தாலே விஞ்சின திரு வயிற்றின் உடைய உள்ளே வைத்து உம்மை உய்யக் கொண்ட –கறுத்து இருந்துள்ள தேஜஸ்சை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை நினையாதார் தண்ணியவர்கள்) 8 | மறம் கிளர்ந்து கரும் கடல் நீர் உரந்துரந்து பரந்தேறி யண்டத்தப்பால்
புறம் கிளர்ந்த காலத்துப் பொன்னுலகம் ஏழினையும் ஊழில் வாங்கி
அறம் கிளர்ந்த திரு வயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை உய்யக் கொண்ட
நிறம் கிளர்ந்த கருஞ்சோதி நெடும் தகையை நினையாதார் நீசர் தாமே –11-6-8 | பதவுரை Show / Hideமறம் கிளர்ந்த, Maram Kilarndha - கொடுமைபொருந்திய கருங்கடல் நீர், Karungadal Neer - கருங்கடலின் வெள்ளமானது உரம், Uram - வேகத்தோடு துரந்து, Thurandhu - ஓடி பரந்து, Parandhu - சுற்றும்பரம்பி அண்டத்து அப்பால் புறம், Andhatthu Appaal Puram - அண்டகடாஹத்திற்கு அவ்வருகாக ஏறி, Eri - வியாபித்து கிளர்ந்த காலத்து, Kilarndha Kaalaththu - விரும்பத்தக்க உலகம் ஏழினையும், Ulagam Ezhinaiyum - உலகங்களை யெல்லாம் ஊழில், Oozhil - முறைமையாலே வாங்கி, Vaangi - வாரிப்பிடித்து அறம் கிளர்ந்த திரு வயிற்றின் அகம்படியில் வைத்து, Aram Kilarndha Thiru Vayittrin Akampadithil Vaiththu - தருமம் விஞ்சின திருவயிறினுட்புறத்திலே வைத்து உம்மை, Ummmai - உங்களை உய்யக்கொண்ட, Uyyaakkonda - உஜ்ஜீவிப்பித்த கரு நிறம் கிளர்ந்த, Karuniram Kilarndha - கருமை மிக்கிருந்துள்ள சோதி, Sothi - தேஜஸ்ஸையுடைய நெடுந் தகையை, Nedun Thakaiya - ஸர்வேச்வரனை நினையாதார் தாம், Ninaiyaadhar Thaam - சிந்திக்கப்பெறாதவர்க்ள நீசர், Neesar - இழிகுலத்தவரேயாவர் |