திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2010 | பெரிய திருமொழி || (11-6–மைந்நின்ற) - (உலகத்தைப் ப்ரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தமை கூறி, உலகிற்கு உபதேசித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரளயம் தேடுகின்றது என்று இளைத்துக் காட்டி அல்லாத அவயவத்தோடு ஒத்த திரு வயிற்றின் உள்ளே வைத்து உம்மை உய்யக் கொண்ட –மேகம் போலே உதாரனான கையை உடையனாய் மணி போலே ஸ்ரமஹரமான நிறத்தை உடையவன் ஸ்ரமஹரமான ஸ்ரீ திருக் குடைந்தையை பாடி ஆடீர்களே) 9 | அண்டத்தின் முகடு அழுந்த அலை முந்நீர்த் திரை ததும்ப ஆவா வென்று
தொண்டர்க்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் தான் அருளி உலகம் ஏழும்
உண்டு ஒத்த திரு வயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை யுய்யக் கொண்ட
கொண்டற் கைம் மணி வண்ணன் தண் குடந்தை நகர் பாடி யாடீர்களே –11-6-9 | பதவுரை Show / Hideஅண்டத்தின் முகடு, Andaththin Mugadu - அண்டபித்தியானது அழுந்த, Azhundha - உள்ளே அழுந்தும்படியாக அலை முந்நீர், Alai Munneer - அலைக்கின்ற கடலினுடைய திரை, Thirai - அலைகளானவை ததும்ப, Thadumba - செறிய ஆ ஆ என்று, Aa Aa Endru - ஐயோவென்று தொண்டர்க்கும், Thondarkkum - பக்தர்களுக்கும் அமரர்களுக்கும், Amarararkkum - தேவர்களுக்கும் முனிவர்க்கும், Munivarkkum - ரிஷிகளுக்கும் தான் அருளி, Thaan Aruli - தான் கிருபைசெய்து உலகம் ஏழும் உண்டு, Ulagam Ezham Undu - உலகங்களையெல்லாம் அமுது செய்தவிடத்திலும் ஒத்த, Oththa - முன்போலவே யிருக்கப்பெற்ற திருவயிற்றின் அகம்படியில் வைத்து, Thiruvayittrin Akampadiyil Vaiththu - திருவயிற்றினுட்புறத்திலே வைத்து உம்மை, Ummmai - உங்களை உய்யக்கொண்ட, Uyyaakkonda - உஜ்ஜீவிப்பித்தருளின கொண்டல் கை, Kondal Kai - மேகம்போல் உதாரனாய் மணி வண்ணன், Mani Vannan - நீலமணி நிறத்தனான பெருமானுடைய தண் குடந்தை நகர், Than Kudanthai Nagar - திருக்குடந்தைப் பதியை பாடி, Paadi - பாடிக்கொண்டு ஆடீர்கள், Aadeergal - நர்த்தனம் செய்யுங்கோள் |