திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2016 | பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒன்றைச் சொல்லி இன்னது உபமானம் என்ன ஒண்ணாத வடிவு – சொல்லும் இடத்தில் உபமானம் கொண்டு இழிய வேணும் – அவை தான் இதுக்குப் போராவாய் இருக்கும் – காமினிக்கு காந்தனுடைய தேஹமும் –ஸ்ரீ ஆழ்வார்கள் எல்லாருக்கும் படி – சங்கேந்தும் கையானைக் –தொழுகைக்கு இவன் கை போலே-தொழுவித்துக் கொள்ளுகைக்கு அவன் கை – தமச பரம -இத்யாதி – கை தொழாக் கையல்ல கண்டாமே –-தொழாக் கை கை யல்ல -என்று அந்வயம்) 5 | மையார் கடலும் மணி வரையும் மா முகிலும்
கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட
மெய்யானை மெய்ய மலையானைச் சங்கேந்தும்
கையானைக் கை தொழாக் கையல்ல கண்டாமே –11-7-5 | பதவுரை Show / Hideமைஆர் கடலும், Maiar Kadalum - கருங்கடலையும் மணிவரையும், Manivaraim - நீலமணிமயமான மலையையும் மா முகிலும், Maa Mugilum - காளமேகத்தையும் கொய் ஆர் குவளையும், Koyi Ar Kuvalaiyum - பறிக்கவேணுமென்று விரும்பத்தக்க நீலோற்பலத்தையும் காயாவும், Kaayavum - காயாம்பூவையும் போன்று, Poondru - ஒத்து இருண்ட, Irunda - கறுத்த மெய்யானை, Meyyanaai - திருமேனியையுடையவனும் மெய்யம் மலையானை, Meyyam Malaiyanaai - திருமெய்யமலையில்கோயில் கொண்டிருப்பவனும் சங்கு ஏந்தும் கையானை, Sangu Aendhum Kaianaai - திருச்சங்கை ஏந்திக்கொண்டிருக்கின்ற திருக்கையையுடையனுமான பெருமானை தொழா, Thozha - அஞ்சலிபண்ணாத கை, Kai - கைகளானவை கை அல்ல, Kai Alla - கைகளேயல்ல கண்டாம், Kandam - (இதனை நாம் நன்கு) அறிவோம். |