திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2018 | பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உபமானம் இல்லை என்று பேசாதே இருக்க மாட்டாரே – திவ்ய விக்ரஹத்துக்கு உபமானம் அபூமியானால் ஆத்மா குணங்களுக்கு உள்ளுப் போகார் இறே- இனி அவனுக்கு இது சேஷம் -என்னும் இத்தை இசையும் இத்தனை – நினைவுக்கு அநதிஷ்டமான நெஞ்சு -நெஞ்சு அல்ல) 7 | கனையார் கடலும் கரு விளையும் காயாவும்
அனையானை அன்பினால் ஆர்வத்தால் என்றும்
சுனையார் மலரிட்டுத் தொண்டராய் நின்று
நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சல்ல கண்டோமே –11-7-7 | பதவுரை Show / Hideகனை ஆர் கடலும், Kanai Ar Kadhalum - ஒலிமிக்க கடலையும் கருவிளையும், Karuvilaiyum - கருவிளைப்பூபையும் காயாவும், Kaayavum - காயாம்பூவையும் அனையானை, Anaiyanai - ஒத்திருக்கின்ற எம்பெருமானை அன்பினால் ஆர்வத்தால், Anbinal Arvaththal - அன்போடும் ஆற்றாமையொடும் சுனை அர் மலர் இட்டு, Sunai Ar Malar Ittu - தடாகங்களில் நிரம்பிய பூக்களைக் கொணர்ந்து ஸமர்ப்பித்து தொண்டர் ஆய் நின்று, Thondar Aayi Nindru - தொண்டர்களாயிருந்து கொண்டு என்றும், Endrum - எப்போதும் நினையாதார், Ninaiyathaar - நினைக்கப்பெறாதவர்களினுடைய நெஞ்சு, Nenju - நெஞ்சானது என்னும், Ennum - ஒருநாளும் நெஞ்சு அல்ல, Nenju Alla - நெஞ்சாகமாட்டாது கண்டாம், Kandam - (இதனை நாம் நன்கு) அறிவோம். |