திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2022 | பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பயத்துக்கு பரிஹாரமும்-உத்பாதகனும் -நீயாய் இருந்தாய் – அதுக்கு பய ஸ்தானம் ஆறு – உமக்கு பய ஸ்தானம் ஏது என்ன – அதுக்கு ஆறு ஓன்று-எனக்கு ஐஞ்சு ஆறு அகழ்ந்து பொகடுகிறது – அஞ்சும் ஆறும் ரசோக்தி விஷயங்கள் ஐந்தும் – தத் க்ராஹங்கள் ஆறும் கர்மேந்த்ரியங்கள் ஐந்தும் -ஜ்ஞாநேந்த்ரியங்கள் ஆறும் – ரூபத்தை சொல்லாமல் விட்டது -பயத்தாலே கண்ணாஞ்சுழலை இட்டமை தோற்றுகைக்கு – உன் பக்கல் நின்றும் அகற்றுகைக்கு பரிகரம் சப்தாதிகள் – அத்தைப் பரிஹரிக்கும் நீ பூர்ணனாய் இருந்தாய் – மமாயா துரத்தயா மாமேவ யே ப்ரபத்யந்தே –நான் பிணைத்த பிணை ஒருவராலும் அவிழ்க்கப் போகாது- என்னையே கால் கட்டி அவிட்கும் அன்று கழிக்கலாம் என்றாய் இறே ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் வார்த்தையை நினைப்பது) 1 | மாற்றமுள வாகிலும் சொல்லுவன் மக்கள்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் என்று இன்னம்
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன்
நாற்றச் சுவை யூறொலியாகிய நம்பீ –11-8-1 | பதவுரை Show / Hideநாற்றம் சுவை ஊறு ஒலி ஆகிய நம்பீ, Naatram Suvai Ooru Oli Agiya Nambi - கந்தம் ரஸம் ஸ்பர்சம் சப்தம் என்னும் புலன்கட்கு உரியனான எம்பெருமானே! (- (அதுயாதெனில்)) மாற்றம் உள ஆகிலும், Maatram Ula Aagilum - (நீ அடியேனை ஆட்கொண்டருளினாயில்லை என்று நான் உன் மேற் குறைகூறும் வார்த்தை கட்கெல்லாம் மாறாக (நீதானே ஆட்பட்டு உய்ந்தாயில்லை என்று என் மேற் குற்றமாக நீ) சொல்லத்தக்க வார்த்தைகள் பல உள்ளனவேயாகிலும் சொல்லுவேன், Solluvein - (அவைநிற்க) யான் ஒன்று கூறுவேன் மக்கள் தோற்றம் குழி இன்னம் தோற்றுவிப்பாய்கொல் என்று, Makkal Thotram Kuzhi Innam Thotruvippaaykol Endru - (உன்னைச்சரணமடையாத ஸாதாரண) மனிதர்கள் (கர்மவசத்தாற்) பிறக்குமிடமான கர்ப்பஸ்தாநத்திலே என்னை இன்னமும் பிறக்கும்படி செய்கிடுவையோ என்று கருதி ஆற்றங்கரை வாழ் மரம் போல், Aatrangkarai Vaal Maram Pol - ஆற்றில் கரையிலேயுள்ள மரம் போன்றவனாகி அஞ்சுகின்றேன், Anjuginren - (வரக்கடவதான அபாயத்தைக்குறித்து எப்பொழுதும்) பயப்படுகின்றேன். |