திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2023 | பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பெரும் காற்றிலே அகப்பட்ட மரக் கலத்துக்கு உள்ளே சேதனர் உடைய நெஞ்சு போலே பயப் படுக்கைக்கு மேற்பட பரிஹாரத்தில் அந்வயம் இல்லை இறே அதுக்கு உட்பட்ட மனுஷ்யர் எல்லாருக்கும் உள்ள பயம் இவர் ஒருவருக்கும் உண்டாய் இருக்கிறது – மிகவும் நடுங்கா நிற்பன் -சரீர வியோக மாத்ரத்திலே இவர்களுக்கு – ஆழி வலவா –உன் கையில் திரு வாழிக்கும் எனது உள் நடுக்கத்துக்கும் சேர்த்திச் சொல்லிப் போ – உனக்கு அசக்தி உண்டு என்று சொன்னாய் ஆதல் -என் நடுக்கைத்தை பரிஹரித்தல் செய்) 2 | சீற்றமுள வாகிலும் செப்புவன் மக்கள்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் என்று அஞ்சி
காற்றைத் திடைப் பட்ட கலவர் மனம் போல்
ஆற்றத் துளங்கா நிற்பன் ஆழி வலவா –11-8-2 | பதவுரை Show / Hideஆழி வலவா, Aazhi Valavaa - சக்கரப்படையைப் பிரயோகித்தலில் வல்லவனே! சீற்றம் உள ஆகிலும், Seetrum Ula Aagilum - நீ கோபிக்கும்படியான குற்றங்கள் (என்னிடம்) உள்ளனவானாலும் செப்புவன், Seppuvan - (உன்னையன்றி எனக்கு வேறுகதியில்லை யாகையால் உன்பக்கல் என் குறையைச் சொல்லிக்கொள்வேன் மக்கள் தோற்றம்குழி தோற்றுவிப்பாய் கொல் என்று அஞ்சி, Makkal Thotram Kuzhi Thotruvippaay Kol Endru Anji - மனிதர்கள் (கர்மாதீனமாகப்) பிறக்கும் பிறவியிலே என்னையும் புகுவிப்பையொ வென்று எண்ணி அச்சமுற்று காற்றத்து இடைபட்ட கலவர் மனம் போல், Kaatrathu Idaipatta Kalavar Manam Pol - பெருங்காற்றில் அகப்பட்டுக் கொண்ட மரக்கலத்திலே யுள்ளாரது மனம்போல ஆற்ற, Aatra - மிகவும் துளங்கா நிற்பவன், Thulankaa Nirpavan - நடுங்கிநிற்பேன் |