திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2025 | பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இரண்டு தலையும் நெருப்பு பற்றி எரியா நிற்க நடுவே அகப்பட்டு நோவு படுகிற ஷூத்ர பதார்த்தம் போலே யாயிற்று ஜன்ம மரணங்கள் இரண்டிலும் அகப்பட்டு நோவு படுகிற படி – பிரளயத்தில் அகப்பட்டு அழிந்து போகப் புக்கதை எடுத்து ரஷித்தவன் அன்றோ) 4 | உருவார் பிறவிக்குள் இன்னம் புகப் பெய்து
திரிவாய் என்று சிந்தித்தி என்றதற்கு அஞ்சி
இருபாடு எரி கொள்ளியினுள் எறும்பே போல்
உருகா நிற்கும் என் உள்ளம் ஊழி முதல்வா –11-8-4 | பதவுரை Show / Hideஊழி முதல்வா, Oozhi Muthalvaa - பிரளயகாலத்து (உலக முழுவதையும் வயிற்றில் வைத்துப் பாதுகாக்கிற) தலைவனே! உரு ஆர் பிறவிக்கள், Uru Aar Piravikkal - வடிவமைந்த பிறப்புக்களிலே இன்னம் புக பெய்து, Innam Puga Peythu - இன்னமும் (என்னைப்) பிரவேசிப்பது திரிவாய் என்று சிந்தித்தி என்று, Thirivaai Endru Sindhiththi Endru - (கருமவசத்தால்) திரியக் கடவாய் என்று (என்னைக்குறித்து நீ) திருவுள்ளங்கொள்ளுகின்றனையோ? எனறு அற்கு அஞ்சி, Arku Anji - அப்பிறவிகளில் திரிதற்கு அஞ்சி. இரு பாடு எரி கொள்ளியின் உள் எறும்பே போல், Iru Paadu Eri Kolliyin Ula Erumbe Pol - இரண்டு பக்கத்திலும் நெருப்புப்பற்றியெரிய அவற்றின் நடுவிலே அகப்பட்டுவருந்தும் எறும்புபோல, என் உள்ளம் உருகாநிற்கும், En Ullam Urugaanirkkum - என்மனம் (க்லேசத்தால்) நெகிழ்ந்து உருகிக்கொண்டேயிருக்கும். |